Sunday, April 29, 2012

சில புலம்பெயர் புலி ஆதரவு தமிழ் மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்ப்பதுபோல நடிப்பதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அடையும் மறைமுக இலாபம் என்ன!

Sunday, April 29, 2012
இலங்கை::சில புலம்பெயர் புலி ஆதரவு தமிழ் மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்ப்பதுபோல நடிப்பதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அடையும் மறைமுக இலாபம் என்ன:-

தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்திற்குத் தமது நல்லெண்ணத்தைக் காட்டி வரு வதாகவும், ஆனால் அரசாங்கம் அதனைப் புரிந்துகொள்ளவில்லை என்றும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டி கருத்துத் தெரிவித்து வரு கின்றனர். தமது நல்லெண்ணத்திற்கு அரசு என்ன கைமாறைச் செய்ய வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை. தமிழ்க் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்கள் சிலர் முகவரி இல்லாத பல இணையத்தளங்களுக்கு வெளியி ட்டு வரும் கருத்துக்களும், காணொளிக் காட்சி பேட்டிகளும் அரசாங்கத்தை வசை பாடுவதாகவும் அரசின் அபிவிருத்திப் பணிகளை விமர்சிப்பதுவுமாகவே உள்ளது. அதிலும் வேடிக்கையான விடயம் யாதெனில் இவர்களில் சிலர் தமது கட்சியின் நிலைப்பாடு என்ன என்று தெரியாமலே பல அறிக்கைகளை விட்டு வருவதுதான்.

தமிழ்க் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அறியாது தமிழ் மக்கள் குழம்பிப் போயுள்ளனர். புலத்தில் அதாவது உள்நாட்டில் அரசாங்கத்தி ற்கு நல்லெண்ணத்தைக் காட்டுவது போல நடிப்பதும் வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர் சமூகத்திற்கு தாம் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் எனக் காட்டுவதுமாக இர ட்டை முகத்துடனேயே கூட்டமைப்பு இன்று செயற்பட்டு வருகின்றது.

எனவே கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஊடகங்கள் மூலமாகத் தமது நிலைப்பாட்டை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில் கூட்டமைப்பிலுள்ள சிலர் அரசின் செயற்பாடுகளை ஆதரிப்ப தாகவும், சிலரோ எதிர்ப்பதாகவுமே இன்றைய நிலை உள்ளது. இரா. சம்பந்தன் அவ ர்களின் மெளனத்தின் அர்த்தம் தான் என்ன? தமிழ் மக்களின் நலனுக்காக என்று இவர்கள் கூறி அரசுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த விரும்பினால் அது குறி த்து ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி தாம் எடுத்த முடிவுக்கான காரணத்தை யும் தெளிவாக விளக்கினால் தமிழ் மக்கள் நிச்சயம் அதனை ஏற்றுக்கொள்வர்.

இரட்டை வேடத்தைப் போட்டுக் கொண்டு எவ்வாறு இவர்களால் அரசாங்கத்திட மிருந்து கைமாறை எதிர்பார்க்க முடியும். ஒன்று இவர்கள் புலிகள் இருந்தபோது செய்த வேலையை அதாவது அரசாங்கத்தை முடிந்தளவு எதிர்த்து விமர்சிப்பது என்ற கொள்கையிலிருந்து கொண்டு எந்தவிதமான அரசின் சலுகைகளையும் தமிழ் மக்களைச் சென்றடையவிடாது தடுப்பதில் குறியாக இருக்க வேண்டும். அல்லது வெளிப்படையாகவே அரசிற்கு ஆதரவை வழங்கி தமிழ் மக்களுக்கு அரசின் அபி விருத்திப் பணிகள் சென்றடைய உதவி புரிய வேண்டும்.

இப்போது புலிகள் இல்லாததனால் இவர்கள் இதனைப் பயமின்றிச் செய்யலாம். கட ந்த காலங்களில் சில தமிழ்த் தலைவர்கள் தமது மக்களின் நலன் கருதி அரசாங்கத் துடன் இணைந்து துணிந்து செயற்பட்டது போன்று ஒவ்வொருவராக அல்லது கூட் டாக களத்தில் இறங்க வேண்டும்.

புலம்பெயர் தமிழ் மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்ப்பதுபோல நடிப்பதனால் இவ ர்கள் அடையும் மறைமுக இலாபம் என்ன என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள் ளது. அரசை ஆதரித்தால் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் தோன்றும் என நினைக்கிறார்களா அல்லது அங்கு வசிக்கும் தமது உறவினர்களுக்கு அச் சுறுத்தல் நிலை ஏற்படும் எனப் பயப்படுகிறார்களா? என்பது புரியாத புதிராகவே உள் ளது.

எது எவ்வாறிருப்பினும், அரசாங்கத்திற்கு நல்லெண்ணம் காட்டுகிறோம் எனும் விடயத்தில் கூட்டமைப்பு இதயசுத்தியுடன் தமிழ் மக்களின் நலன் கருதிச் செயற்பட வில்லை என்பது மட்டும் புலனாகிறது. இத்தகைய இரட்டை முகங்கள் உள்ளவர்கள் எப்படி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முடியும்? இதனால்தான் தமிழ் மக் கள் குறிப்பாக வடக்கு வாழ் தமிழ் பேசும் தமிழ் மக்கள் மூன்றாவது ஒரு சத்தியைத் தமது தலைமையாக ஏற்கத் தயாராகி வருகின்றனர். பழம்பெரும் பரம்பரைத் தமிழ்க் கட்சியும் அல்லாத முன்னாள் போராட்ட ஆயுதக் குழு அணியுமல்லாத இளைஞர் படையணியை மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த இளைஞர் படையணியின் ஆதிக்கம் அடுத்துவரும் தேர்தல்களில் வடக்கில் தெரியவரும்.

உண்மையில் அரசாங்கம் வடக்கு, கிழக்கில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற் கொண்டு வருகின்றது. நிவாரணம், மீள் குடியேற்றம் ஒருபுறமிருக்க தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றினைப் பெற்றுக் கொடுக்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடசங்கற்பம் பூண்டுள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் இப்போது தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் பலவும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இத்தகைய விடயங்களுக்கு கூட்டமைப்பினர் தமது ஆக்கபூர்வமான கருத்துக்க ளையும் முன்வைத்து கலந்துரையாடி ஒரு நிலையான தீர்வினை எட்ட வழி சமைக்க வேண்டும். பத்திரிகைகளில் அறிக்கைகளை விடுவதன் மூலமோ அல்லது தொலைக் காட்சிகளில் தோன்றி வீர வசனம் பேசுவதன் மூலமோ பிரச்சினைகளுக்குத் தீர்வி னைக் கண்டு விட முடியாது. மாறாக இது மேலும் பிரச்சினைகளையே தோற்றுவிக் கும்.

உண்மையான நல்லெண்ணத்தை இதய சுத்தியுடன் கபடமில்லாது நாம் வெளிப் படுத்தினால் பதிலுக்கு அரசிடமிருந்து நாம் நல்லெண்ணத்தைக் கேட்டுப் பெற வேண்டிய நிலை ஏற்படாது. எல்லாம் தானாகவே எதிர்பார்ப்பதற்கும் மேலாகக் கிடை க்கும்.

No comments:

Post a Comment