Sunday, April 29, 2012இலங்கை::வீடுகளை உடைத்து பொருட்களை களவாடும் குழுவொன்றைச் சேர்ந்த மூவர் கிரிந்திவெல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியபோது அவர்கள் தொடர்புபட்ட குற்றச்செயல்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் கிரிந்திவெல பொலிஸ் பிரிவிலுள்ள ஒன்பது வீடுகளையும் பூகொடை பிரதேசத்தில் உள்ள மூன்று வீடுகளையும் உடைத்து அதிலிருந்து பொருட்களை களவாடியுள்ளனர்.
சந்தேகநபர்கள் மே மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்...
இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு; தாய் கைது!
பலாங்கொடை, கல்தோட்டை பிரதேசத்தில் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இரட்டைக் குழந்தைகளை பிறசவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதில் ஒரு குழந்தை வீட்டிற்கு அருகேயுள்ள காட்டில் கைவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மற்றைய குழந்தை பிறக்கும் போதே உயிரிழந்திருந்தமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் பொலிஸ் பாதுகாப்புடன் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
70 இலட்ச ரூபா பெறுமதியான பலசரக்கு பொருட்களை திருடியவர்கள் கைது!
மொத்த விற்பனை நிலையங்களின் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பலசரக்கு பொருட்களை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்றைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெக்கிராவை, கட்டுகஸ்தோட்டை, மாவனெல்ல, மெனிக்கென்ன, கம்பளை ஆகிய பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில இருந்து இவர்கள் பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களால் திருடப்பட்ட பலசரக்கு பொருட்களின் பெறுமதி சுமார் 70 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. மிளகு ஏலம் கராம்பு உள்ளிட்ட பலசரக்கு பொருட்களையே சந்தேகநபர்கள் திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் வசமிருந்த இரண்டு வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment