Saturday, April, 28, 2012வாஷிங்டன்::பாகிஸ்தானில் அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லாடனை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். அதன் படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட கோரி தொடர்ந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் கடந்த ஆண்டு மே 2ம் தேதி ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான படங்கள், வீடியோவை வெளியிட கோரி, நீதித்துறை கண்காணிப்பு என்ற சமூக அமைப்பினர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட இந்த வழக்கை நீதிபதி ஜேம்ஸ் இ போஸ்பெர்க் விசாரித்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:ஆயிரம் வார்த்தைகளுக்கு ஒரு படம் சமம் என்று சொல்வார்கள்.
சுட்டுக் கொல்லப்பட்ட பின்லாடனின் படங்களை வெளியிட்டால், அமெரிக்கர்களுக்கு எதிராக வன்முறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பை முன்னிட்டு இந்த படங்கள், தகவல்களை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற முடியாது. அவை தடை செய்யப்பட்ட விஷயங்கள். எனவே, பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள், அவரது இறுதி சடங்கு தொடர்பான படங்கள் தகவல்கள் எதையும் வெளியிட முடியாது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment