Saturday, April 28, 2012

யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Saturday, April, 28, 2012
இலங்கை::யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் நேற்று சந்தித்து தமது நியமனங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சர் அவர்களது யாழ் அலுவலகத்தில் இச்சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் அவர்கள் நியமனங்கள் கிடைக்கப் பெற்றதும் ஒவ்வொருவரும் தத்தமக்கான வேலைவாய்ப்புகள் கிடைத்து விட்டதாக மாத்திரம் எண்ணி விடக் கூடாது.

சமூக நலன்களோடும் அக்கறையோடும் மக்களது பிரச்சினைகளை அணுகி அவர்களுக்கு உரிய வகையில் தீர்வு காண வேண்டும் என்பதுடன் அதன் மூலமே எமது சமூகத்தையும் நல்வழிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்...

ஊடகவியலாளர்கள் தாம் சார்ந்த ஊடக நிறுவனங்களுக்கு அடிபணியாது சுதந்திரமாகச் செயற்பட வேண்டும்: சுதந்திர ஊடகக் குரல் நிறுவனத்திற்கு-டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி!

ஊடகவியலாளர்கள் தாம் சார்ந்த ஊடக நிறுவனங்களுக்கு அடிபணியாது சுதந்திரமாகச் செயற்பட வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற சுதந்திர ஊடகக் குரல் நிர்வாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகங்கள் பக்கசார்பற்ற முறையில் சுதந்திரமாகவும் சரியானதாகவும் வெளியிடுவது மட்டுமன்றி உண்மைச் செய்திகளையும் வெளியிட வேண்டும்.

குடாநாட்டிலிருந்து வெளிவரும் சில பத்திரிகைகள் உண்மைக்குப் புறம்பான செய்திகள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதாகச் சுட்டிக் காட்டிய அமைச்சர் அவர்கள் இது விடயம் தொடர்பில் சில ஆதாரங்களையும் இதன்போது காண்பித்தார்.

அத்துடன் எதிர்காலங்களில் இங்குள்ள ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களையும் செய்திகளையும் வெளியிடுகின்ற போது பக்கசார்பின்றியே செயற்பட வேண்டும். அதேவேளை சுதந்திரமாகவும் செயற்பட வேண்டும் எனவும் இதன் மூலமே மக்கள் உண்மையான செய்திகளையும் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்றும் சுட்டிக் காட்டினார்.

சார்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு சுதந்திர ஊடகக் குரல் நிர்வாகத்தினர் அமைச்சர் அவர்களை இன்றைய தினம் சந்தித்த போது அதன் வளர்ச்சிக்காக 25 ஆயிரம் ரூபா நிதியை வழங்கியதுடன் தமது உதவிகள் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment