Saturday, April 28, 2012

கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி முஸ்லிம் பிரநிதிகளுடன் சந்திப்பு!

Saturday, April, 28, 2012
இலங்கை::தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தை ஊடகங்கள்தான் திரிபு படுத்தியுள்ளன என கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர்ஜெனரல் லால் பெரோ தெரிவித்தார்.
நேற்று மாலை காத்தான்குடிப் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின்அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை மாநாட்டு மண்டபத்தில் முஸ்லிம் பிரநிதிகளுடனான சந்திப்பில்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்

குறித்த பள்ளிவாசலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதே தவிர, பள்ளிவாசல்உடைக்கப்படவில்லை. பள்ளிவாசல் உடைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் ஊடகங்களால்திரிவுபடுத்தப்பட்டதேயாகும். அவ்வாறு சம்பவம் இடம்பெற்றதாக நீங்கள் கருதினால் உங்கள்அனைவரையும் தம்புள்ளைக்கு கூட்டிச் சென்று குறித்த பள்ளிவாசலை காட்டுவதற்கு தான் தயாராகவுள்ளேன் எனவும் முஸ்லிம்களாகிய நீங்கள் அந்தப் பள்ளியில் தொழுகைகளை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு சில பௌத்த மத குருக்களின் நடவடிக்கைக்கு முழு பௌத்த சமூகமும் ஆதரவுதெரிவிக்கவில்லை. இதை வண்மையபகக் கண்டிக்கின்றோம். ஏனெனில் தம்புள்ள பள்ளிவாயல்சம்பவமானது இனங்களுக்கிடையில் முரண்பாட்டையும் விரிசலையம் ஏற்படுத்தச் செய்யும் நடவடிக்கையாகும்.

இச்சம்பவமானது சிறு இனவாத குழுக்களுக்களின் செயற்பாடே தவிர சிங்கள சமூகம் இதை எதிர்க்கின்றது.

முஸ்லிம்கள் அமைதியைக் கடைப்பிடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த முஸ்லிம்களும் பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகளும் தான் ஜெகீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது இலங்கைக்கு கைகொடுத்தார்கள் என்பதை தெரிவித்துகொள்வதோடு அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

நாட்டில் 30வருட கால புலி பயங்கரவாத யுத்தத்திற்குப் பின்னர் சமாதானமாக நிம்மதியாக இன ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இன்றைய சூழ் நிலையை குழப்புவதற்காக உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் பல கோணங்களில் பல சதி முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.

ஒரு கால கட்டத்தில் முஸ்லிம்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டார்கள். இது போன்ற நிலைமைகள் மீண்டும் உருவாகக் கூடாது.

எமது நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பதற்காகவும் , அதிமேதகு ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸவினால் எமது நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியை தடைசெய்வதற்காகவும் எல்.டி.டி.ஈ. விடுதலைப் புலி அபிமானிகளால் பல விதமாக தடைகள் போடப்பட்டு பல விதமான தொந்தரவுகளும் தரப்பட்டு வந்தன.

எல்.டீ.டீ.யினரால் பல அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அது போன்ற நிலைமைகள் இனி ஒரு போதும் நடைபெறக் கூடாது.

எமது பாதுகாப்புக் கடமைகளை செய்வதற்கு முஸ்லிம்களாகிய நீங்கள்அமைதிகாத்து பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஏனெனில் நிரந்தர சமாதானம்தொடர்ந்து இருப்பதற்கும் அதனை ஸ்தீரப்படுத்துவதற்கும் முஸ்லிம்களின் ஒத்துழைப்புஅவசியமாகும்.

இந்த நாட்டிலே தமிழ் சிங்கள பௌத்த கிறிஸ்தவ சகலருக்கும் நமமான உரிமை வழங்கப்படுகின்றது.

இந்த நாடு இறைவனின் அருட்கொடைகள் நிறைந்த ஒரு நாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓவ்வொரு சமயத்திலும் சமயத்திற்கு தூரமானவர்கள் இருக்கின்றனர். இவர்கள் போதைப் பொருட்களை உபயோகிப்பதுடன் கட்டுக்கடங்காதசில நடவகெ;கைகளையும் செய்து கொண்டு இருப்பார்கள்.

இவர்கள் சமயக் கட்டமைப்புக்குள்கொண்டு வரப்பட வேண்டும். அது ஒவ்வொரு சமயத்திலுமுள்ள சமூகத்தவர்களின் கடமையாகும்.

ஆகவே இந்த விடயத்தில்முஸ்லிம்களாகிய நாம் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடித்து இறைவனின் ஆசீர்வாதத்தைப்பெற வேண்டுமென கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர்ஜெனரல் லால் பெரோ தெரிவித்தார்.

இதன் போது முஸ்லிம் பிரமுகர்கள் பலரும் பல தரப்பட்ட கேள்விகளை கட்டளைத் தளபதியிடம் கேட்டனர்.

ஏலவே முஸ்லிம்களின் அநுராதபுரம் தர்ஹா உடைப்பு விவகாரத்தில் அரசாங்கம் உரியநடவடிக்கை எடுக்க வில்லை.

தம்புள்ள பிரச்சினையை இனவாதத்தை தூண்டும் செயலாக சித்தரித்து வருபவது ரண்கிரி வானொலி அலைவரிசையே ஏன் இதைஅரசாங்கம் இது வரைக்கும் கண்டிக்கவில்லை.

தம்புள்ள பள்ளிவாயல் சம்பவம் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஒன்றாகும். இதுவரைஉரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பன போன்ற கேள்விகளை இதன் போது கேட்டதுடன் தம்புள்ளசம்பவம் தொடர்பில் தமது விசனங்களையும் கவலைகளையும் தெரிவித்தனர்.

காத்தான்குடிப் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் கூட்டத்தில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதி நிதிகள் உலமா சபை பிரதி நிதிகள் மட்டக்களப்பு கல்லடி234வது படைப்பிரிவின் கட்டளை தளபதி கேனல் திலகரட்ண’கோயில்குளம் இராணுவ முகாமின் கட்டளைதளபதி ராஜபக்ஷ இராணுவ அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment