Friday, March 30, 2012

கல்வியறிவு அமைப்பு தகவல் இங்கிலாந்தில் 5 பேரில் ஒருவர் படிக்காதவர்!

Friday, March,30, 2012
லண்டன்::இங்கிலாந்தில் 5 பேரில் ஒருவருக்கு சரியாக எழுத படிக்க தெரியவில்லை என்று உலக கல்வியறிவு அமைப்பு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. உலக கல்வியறிவு அமைப்பு, பணக்கார நாட்டு மக்களின் கல்வியறிவு குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில், இங்கிலாந்தின் மக்கள் தொகையில் 80 லட்சம் பேர் கல்வியறிவில் குறைந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு சரியாக எழுத, படிக்க தெரியவில்லை. மருத்துவ சீட்டுகளில் உள்ளவற்றை படிக்க முடியவில்லை. பலருக்கு செக் புக்கை சரியாக பூர்த்தி செய்ய தெரியவில்லை என்று தெரிய வந்துள்ளது.இதுகுறித்து இந்த அமைப்பின் தலைமை நிர்வாகி ஆண்ட்ரூ கே கூறுகையில்,

கல்வியறிவை பொறுத்த வரையில் நீங்கள் வளர்ந்த நாட்டினரா, வளரும் நாட்டினரா, வறுமையில் உள்ள நாட்டை சேர்ந்தவரா என்பதெல்லாம் கிடையாது. ஆனால், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தின் கல்வியறிவு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்றார். உலக நாடுகளில் இத்தாலியில்தான் 47 சதவீதம் பேருக்கு எழுத படிக்க தெரியவில்லை. 2வது இடத்தில் அயர்லாந்து (22.6 சதவீதம்), 3வது இடத்தில் இங்கிலாந்து (21.8 சதவீதம்) இடம்பெற்றுள்ளது என்று இந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. நான்காவது இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்கர்களில் 20 சதவீதம் பேருக்கு எழுத படிக்க தெரியவில்லை என்று இந்த அமைப்பு கூறியுள்ளது.

No comments:

Post a Comment