Saturday, March 31, 2012

பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவுபவர்களின் முயற்சிகள் தோல்வி - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Saturday, March, 31, 2012
இலங்கை::நாட்டிற்கு எதிராக பரப்பப்படும் தவறான பாரிய பிரசாரங்களி லிருந்து நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

பதிலளிக்கும் பொறுப்புக்கு மேலதிகமாக நாட்டைப்பற்றிய யதார்த்தத்தையும், சத்தியத்தையும் உலகிற்கு எடுத்துக் கூறவேண்டியதும் ஊடகங்களுக்கான பொறுப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி; சில சக்திகள் ஊடகங்கள் மூலம் எழுப்பும் தவறான பிரசாரங்களுக்கு இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

ஊடக அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தை நேற்றுக் கொழும்பில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:- ஊடகம் என்பது ‘கிளேமோர்’ குண்டு போன்று பலமுடையது. நாடுகளைக் கடந்து செயற்படுவது. எனினும் பொறுப்புடன் செயற்படுவது அவசியமானது. மக்கள் பட்ட கஷ்டங்கள் போதும் மீள இனவாதம் கிளப்பப்படக் கூடாது.

நாம் இலங்கையர் என்ற வகையில் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதில் வெற்றி கண்டுள்ளோம். எனினும் இன்றும் கட்சி பேதங்களுடன் செயற்படுபவர்கள் ஊடகங்களினூடாக நாட்டுக்கெதிராக பிரசாரங்களை மேற்கொள்வதற்கு இடமளிக்க முடியாது.

இன்றும் எதிர்காலத்திலும் நாட்டிற்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளி லிருந்து நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கும் குறிப்பாக தகவல் திணைக்களத்திற்கும் உள்ளது. தேசிய மட்டத்திற்கு மேலாக உலகளவில் உண்மையையும் யதார்த்தத்தையும் எடுத்துக் கூறுவதில் முன்னிற்பது அவசியமாகும். 48ம் ஆண்டளவில் சோல்பரி ஆணைக்குழுவின் ஆலோசனைக்கிணங்க தகவல் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூருகிறேன். இத்திணைக்களமானது முக்கியமான பல நடவடிக்கைகள் மூலம் அதன் இலக்குகளை எட்டி வருகிறது.

தற்போது புதிதாக இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள ஊடக அபிவிருத்திக்கான மத்திய நிலையம் பல முக்கியமான பிரிவுகளை உள்ளடக்கி ஊடகத்துறையினருக்கு உறு துணை புரிய உள்ளது. இந்தத் திணைக்களம் நாட்டிற்காக, மக்களுக்காக அரிய பல செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதைப் பெருமையுடன் கூற முடியும். அதேபோன்று இங்கு பல சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இவர்கள் அர்ப்பணிப்புடனான சேவை களை நாட்டிற்காக வழங்கியுள்ளனர். இவர்களை நான் வாழ்த்துவதில் மகிழ்ச்சி யுருகிறேன். இவர்கள் தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச விருதுகள் பலபெற் றவர்கள்.

அதேபோன்று தகவல் திணைக்களமானது அரசாங்கத்தின் அபிவிருத்தியை மக்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கிலேயே ஆரம்பிக் கப்பட்டது. அதன் இலக்கை அது நிறைவேற்றிவருகிறது.

நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகள், நாடு பெற்ற வெற்றி, இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் போன்றவற்றை தேசிய மட்டத்தில் மட்டுமின்றி முழு உலகிற்கும் வெளிப்படுத்தும் செயற்பாட்டை இக்கால கட்டங்களில் அது முன்னெடுக்க வேண்டியது முக்கியம்.

கொழும்பை மட்டும் இலக்காகக் கொண்ட அபிவிருத்தியும் மாற்றப்பட்டு தற்போது வடக்கு, கிழக்கு, தெற்கு என நாடு முழுதுமும் அபிவிருத்தி செயற் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் துறைகளான விவசாயம், மீன்பிடி, நீர்ப்பாசனம், மின்சாரம் ஆகியதுறைகள் பாரிய அபிவிருத்தி கண்டு வருகின்றன. இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் செயற் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. எனினும் இது ஊடகங்களுக்குத் தெரிவதில்லை என நினைக்கிறேன்.

கடந்த காலங்களில் புலிகள் அமைப்பி லிருந்த முன்னாள் உறுப்பினர்களில் பெருமளவிலானோரை நாம் விடுதலை செய்துள்ளோம். அவர்கள் புனர்வாழ்வு பெற்றுவிட்டதாகவும் நம்புகிறோம். நான் சந்தித்த பல வெளிநாட்டுத் தூது வர்கள் இது பற்றி என்னிடம் தெரிவிக்கும் போது இந்த விடயம் தமக்குத் தெரியாது எனக் கூறினர்.

எமது ஊடகங்கள் ஏன் இதனை உலகுக்கு வெளிப்படுத்தவில்லை. ஊட கங்கள் இதனை மறந்து விட்டனவா?

பெண்கள் மீதான துஷ்பிரயோகம், எங்காவது நடக்கும் படுகொலைகள் பற்றி பெரும் பிரசாரங்களை மேற்கொள்ளும் ஊடகங்கள் ஏன் இத்தகையவற்றை வெளிப்படுத்த தவறுகின்றன? இந்த நாட்களில் 2500 ரூபாவிற்கு தாராளமாக உண்டு, குடிக்க முடியும்’ என்ற கூற்று பெரிதாக பிரசாரப்படுத்தப்படுகிறது.

உண்மையில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, குரோதம் நிறைந்த அரசியல் செயற்பாடுகளை ஒழிப்பது, தேசிய அபிவிருத்தியை உலகிற்குத் தெரியப்படுத்து வது போன்ற நடவடிக்கைகள் ஊடகங்களில் இடம்பெறுவதில்லை.

சில கிராமப் பிரதேசங்களில் அங்கு நடைபெற்றுவரும் கெட்ட விடயங்கள் பதாதைகளில் பதியப்பட்டுள்ளது போல் அங்கு நடக்கும் நன்மைகள் எழுத்து வடிவில் வெளிப்படுத்தப்படுவதில்லை.

கிராமங்கள் தற்போது எழில் பெற்றுள் ளனடுத்த முன்வருவதில்லை.

நாம் முதலில் எம் நாட்டின் மீது அன்பு செலுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும். எந்த இனம், எந்த மதம், மொழி என்றில்லாமல் அவர்கள் தாய் நாட்டுக்கு அன்பு செலுத்த வேண்டும். அதற்குப் பெருமை பாராட்டப்பட வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது முக்கியம்.

தனமல்வில, கதிர்காமம் பகுதிகளில் வீதி நிர்மாணப் பணிகளின் போது மாணிக்கக் கற்கள் காணப்பட்டுள்ளன. இது ஒரு நல்ல சம்பவம், எனினும் அதனை மோசமாகவும், அதனை வைத்து அரசாங் கத்தைச் சாடவும் சில ஊடகங்கள் முயற் சித்தன. இதனால் இவர்கள் மக்களுக்கு கூற முற்படுவதென்ன?

குப்பை மேடுகளாகக் காட்சியளித்த கொழும்பு நகரம் தற்போது எழில் பெற்றுள்ளது.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப் படுகின்றது. இவற்றை ஏன் ஊடகங்கள் வெளிப்படுத்துவதில்லை?

நல்லதை நல்லதாக வெளிப்படுத்த வேண்டும். மக்கள் மேம்பாடு, நாட்டின் எதிர்காலம் தொடர்பான நடவடிக்கைகள் போன்றவை வெளிப்படுத்தப்பட வேண் டும். அதர்மத்தையன்றி தர்மத்தையும் வளம் குன்றியதையன்றி வளம் பெறு வதையும் வெளிப்படுத்துவது அவசியம்.

தவறுகள் பற்றி எடுத்துக் கூறுவது போல் நல்லவைகள் பற்றியும் யதார்த்தம் பற்றியும் கூற வேண்டும். இனவாதத்தைக் கிளப்பும் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது.

மக்கள் பட்ட துயரங்கள், கஷ்டங்கள் போதும் இனியும் அதற்கு வழி வகுக்காது சரியானதை சரியாக வெளிப்படுத்துவது முக்கியம். இதை மறந்து செயற்படக் கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவுபவர்களின் முயற்சிகள் தோல்வி - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

நல்லிணக்கத்தின் ஊடாக நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக தேவைப்படும் எந்தத் தொலைவுக்கு செல்லவும் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.

பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிர லுக்கு இன்னும் உதவி வருகின்ற வர்களின் முயற்சிகள் தோல்வியுற்று இருப்பதையே உங்களது வருகை எமக்கு உணர்த்துகின்றது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். எக்ஸ்போ- 2012 சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொழும்பு- 7 லுள்ள பண்டார நாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமான இக்கண்காட்சியில் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, கொரியா உட்பட அறுபது நாடுகளைச் சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கு பற்றியுள்ளனர்.
இந்தக் கண்காட்சியை அங்கு ரார்ப்பணம் செய்து வைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந் தும் உரையாற்றுகையில், எமது நாட்டின் வர்த்தகத் துறையில் ஏற் பட்டு வருகின்ற பாரிய முன்னேற் றத்தில் நாம் அடுத்தபடி எடுத்து வைக்கவிருக்கின்றோம். இந்த முக்கியத்துவம் மிக்க சந்தர்ப்பத்தில் நடைபெறும் இக்கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவத்தில் பிரதம அதிதியாகப் பங்குபற்றுவதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

தற்போது இலங்கையில் புதிய அபிவிருத்தி நடைபெறுகின்றது. வர்த்தக முதலீடு மற்றும் முக்கியத்துவம் மிக்க பங்களிப்புகளுக்காக இலங்கை மற்றும் வெளிநாட்டு வர்த்தக சமூகத்தினர் பாரிய எதிர்பார்ப்புக்களுடன் இந்த சந்தர்ப்பத்தில் பங்குபற்றி இருப்பதை நான் அறிவேன். வர்த்தகம், முதலீடு, சுற்றாடல் மேம்பாடு மற்றும் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் பங்குபற்ற வருகை தந்துள்ள சகல வெளிநாட்டவர்களையும் அன்புடன் வரவேற்கின்றேன். இவ்வாறு பெருந்தொகை வர்த்தக சமூகத்தினரின் வருகையானது இந்நாட்டின் வர்த்தக துறையின் மேம்பாட்டில் சிறந்த வெளிப்பாட்டைக் காட்டுகின்றது.
இலங்கை தற்போது வர்த்தக நடவடிக் கைகளுக்காக முழுமையாக திறக்கப்பட்டு ள்ளது. இதனை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கையும் அவற்றின் வித்தியாசமும் நன்கு தெளிவுபடுத்தும்.

இந்த சந்தர்ப்பம் 15 வருடங்களுக்குப் பின்னர் கிடைக்கப்பெற்றுள்ளது. வர்த்தகம், முதலீடு உல்லாசப் பயணத்துறை மற்றும் அபிவிருத்தி என்பன ஒன்றாகக் கவரக்கூடியவையாக இணைந்து காணப்படுகின்றன. இவ்வாறு 15 வருட கால இடைவெளி ஏற்பட்டதற்கான காரணத்தை கூறுவதை பொருத்தமான தெனக் கருதுகின்றேன். இந்தக் காலப்பகுதியில் மிகக் குரூரமான பயங்கரவாதத்திற்கு முகம்கொடுத்தோம். இந்தக் காலப் பகுதியில் வெளிநாட்டவரி டமிருந்து சில உதவிகளை பெற்று வந்த பயங்கரவாத சக்திகளின் செயற்பாட்டி னால் வர்த்தக நடவடிக்கைகளும் எம்மை விட்டு தூரமாகி இருந்தன.

இந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறான நெருக்கடி இப்போது முடிவுற்றுள்ளது என்பதை நீங்கள் நேரடியாகப் பார்க்கலாம். நீங்கள் சுதந்திரமாக நடமாடும்போது இவற்றை உங்களால் பார்க்கவும், உணரவும் முடியும். அது உண்மையாகவே முடிந்துள்ளது.

பிரிவினைவாதமும் வன்முறைச் சக்திகளும் மீண்டும் அவற்றின் குரூர தலைகளை தூக்குவதற்கு எமது தாயகத்தில் எங்கும் நாம் இடமளிக்கமாட்டோம் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக் கின்றேன். இலங்கை மிக அர்ப்பணிப்புடன் வென்றெடுத்த சமாதானத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றது. நாம் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான பாதையில் முன்னோக்கி செல்லுகின்றோம்.

நல்லிணக்கத்தின் ஊடாக நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக தேவைப்படும் எந்தத் தூரத்திற்கு செல்லவும் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. இது எமது மக்களுக்காக எமக்குள் ஏற்பட்டிருக்கும் அர்ப்பணிப்பாகும். இதனை எப்படி செய்யவேண்டும்? எந்த முறையில் மேற்கொள்ளவேண்டும் என்றும் எவரும் எமக்கு சொல்லித் தரத்தேவை இல்லை.

நாட்டில் யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் முடிவுற்றுள்ளது. தேவையற்ற கடும் ஒழுங்குவிதிகள் ஊடாக போட்டி வர்த்தக துறை மட்டுப்படுத்தப்படாது திறந்து விடப்பட்டுள்ளது. வர்த்தகத்தை ஊக்குவிக்கும் அரச தலைவரின் கீழ் தனியார் துறையின் முழுமையான பங்களிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றின் பயனாக தற்போது எமது நாட்டில் இப்பிராந்தியத்திலேயே தனித்தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த வருடம் இலங்கையில் நேரடி வெளிநாட்டு முதலீடு இரு மடங்காக அதிகரித்தது. அத்தோடு இவ்வருடமும் கொழும்பு பங்குச் சந்தையின் அண்ணளவான முதலீடுகளைப் போல வணிக வங்கிகளின் முதலீடுகளும் அதிகரித்துள்ளன.

இந்தக் கண்காட்சியில் 370 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சிறிய, மத்திய அளவிலான கைத்தொழில் துறையினர் பங்குபற்றியுள்ளனர். இவர்களில் 25 வகையைச் சேர்ந்தவர்கள் இறக்குமதி துறையைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் மேற்கொள்ளும் இறக்குமதி நடவடிக்கை களால் இந்நாட்டில் பொருளாதாரம் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. இப்பிராந்தியத்திலேயே இலங்கை வர்த்தக மற்றும் வணிக நடவடிக்கைகளில் தற்போது கேந்திர நிலையமாக மாறியுள்ளது. என்றாலும் வெகு விரை வில் இலங்கை ஆசியாவின் கேந்திர நிலையமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

கடந்த முப்பது வருடகாலத்தில் இலங்கையின் அபிவிருத்தி தடைப்பட்டிருந்தது. பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இன்னும் உதவி வருகின்றவர்களின் முயற்சிகள் தோல்வி யுற்று இருப்பதையே உங்களது வருகை எமக்கு உணர்த்துகின்றது என்றார்.

No comments:

Post a Comment