Sunday, March 31, 2013
பாரீஸ்::உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று எனப் புகழ் பெற்றது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபில் டவர் ஆகும். 1889ஆம் ஆண்டு கட்டப்பட இந்த டவர், உலகின் உயரமான கட்டமைப்பு என்ற பெருமையுடன், பிரான்சின் புராதான கலைச்சின்னனமாகவும் விளங்குகின்றது. நாள்தோறும், இதனைச் சுற்றிப்பார்க்க வருபவர்களில் வெளிநாட்டுப் பயணிகளும் அடங்குவர்.
2011-ஆம் ஆண்டில், இதனைத் தகர்க்கப்போவதாகப் பலமுறை வந்துள்ள மிரட்டல் எச்சரிக்கைகளால், இங்கு வந்த பார்வையாளர்கள் 4,000 பேருக்கும் மேல் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், நேற்று சனிக்கிழமை, அந்நாட்டு நேரப்படி 7 மணி அளவில், ஒரு அனாமதேய மிரட்டல் எச்சரிக்கை தொலைபேசி மூலம் வந்துள்ளது.
இதனால், அப்போது அங்கிருந்த பார்வையாளர்கள் 1400 பேரும் அப்புறப்படுத்தப்பட்டு, மோப்பநாய்கள் உதவியுடன் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தமுறை வழக்கத்துக்கு மாறாக பாதுகாப்புப்பணியில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர். இந்த சோதனை பல மணி நேரம் நீடித்தது.
ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த மாலி நாட்டில், புரட்சியாளர்களை ஒடுக்க, அரசுக்கு ஆதரவாக பிரான்ஸ் தனது ராணுவத்தினரை அனுப்பியுள்ளது. இதனால் எழும் தொடர் அச்சுறுத்தல்களால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment