Sunday, March 31, 2013
இலங்கை::தேசப்பற்றுள்ள அமைப்புகளின் குரலுக்கு செவிக் கொடுக்காது, அரசாங்கம், வடமாகாண சபைத் தேர்தலை நடத்தினால், அதன் பின்னர், தெற்கில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட போவதாக தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது என தேசப்பற்றுள்ள அமைப்புகள் ஏகமனதாக தீர்மானித்துள்ளன. இதனடிப்படையில் அரசாங்க முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் இந்த அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில், அரசாங்கம் இதனை விட தீர்க்கமான சந்தர்ப்பங்களில், கடுமையான தீர்மானங்களை எடுத்து நாட்டு நலனுக்காக செயற்பட்டுள்ளதால், மாகாண சபை முறைமையை ஒழிப்பது முடியாத காரியமல்ல எனவும் ஜெனிவா அல்லது இந்தியாவுக்கு பயந்து, வட மாகாண தேர்தல் நடத்தப்பட்டால், நாடு, அரசாங்கமும், மக்களும் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என குணவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment