Sunday, March 31, 2013

மட்டக்களப்புக்கு சுற்றுலா சென்ற மாணவர்கள் 3 பேரும், ஆசிரியர் ஒருவரும் கடலில் மூழ்கி பலி!

Sunday, March 31, 2013
இலங்கை::பதுளையில் இருந்து மட்டக்களப்புக்கு சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்கள் 3 பேரும் ஆசிரியர் ஒருவரும் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரக் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர்.

இச்சம்பவம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட நாவலடி வாவியையும் கடலையும் இணைக்கும் முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியில் இன்று காலை இடம்பெற்றது.

பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலய ஆசிரியர் கந்தசாமி பிரதாபன் வயது 40 நாற்பது, ஹாலிஎல ஊவா விஞ்ஞான கல்லூரியில் 2012ம் ஆண்டு க.பொ.த. சாதாண பரீட்சை எழுதிவிட்டு ஏப்ரல் 10ஆம் திகதி வெளிவரவுள்ள பெறுபெறுகளை எதிர்பார்த்திருந்த மாணவர்களான கனகசபை நிதர்சன் (வயது 17), போல்ராஜ் சாந்தன் (வயது 17), பாலசுப்பிரமணியம் அபிசாந்த் (வயது 17), ஆகியோரே நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர்.

மொத்தமாக 9 பேர் கடலில் நீராடியுள்ளதுடன் இவர்களில் நால்வரே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.

அண்மையில் இதே கடற்பரப்பில் 2012ம் ஆண்டு க.பொ.த. சாதாரண பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருந்த டிலுஸ்காந் எனும் மாணவன் நண்பனை காப்பாற்றச் சென்ற வேளையில் கடலில் மூழ்கி பலியானமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment