Sunday, March 31, 2013

இலங்கையில் இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்ச!

Sunday, March 31, 2013
இலங்கை::இலங்கையில் இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்ச கூறியுள்ளார்.

இலங்கையில்
தென்பகுதியில் உள்ள விகிரகெனாவில் நடைபெற்ற பௌத்த மத நிகழ்ச்சியில்பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது:-

இலங்கை ஜனநாயக நாடு. இங்கு பௌத்த மதத்தைச் சாராதவர்களுக்கும் முழு சுதந்திரமும், அனைத்து உரிமைகளும் உண்டு. மற்ற மதத்தினரின் உரிமைகளைக் காப்பது பெரும்பான்மையாக உள்ள பௌத்த மதத்தினரின் கடமை.மதவாதத்தைத் தூண்டி இலங்கைக்கு எதிரான தவறான கருத்துகளை ஏற்பட்ட முயலுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தாய் நாட்டின் மீது பற்றுள்ள அனைவருக்கும் இனம், மதங்களிடையே நல்லிணக்கத்தைப் பேண வேண்டிய பொறுப்பு உள்ளது. இலங்கைக்கு இனவாத நாடு அல்லது மதவாத நாடு என்ற பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது. பண்டைய காலத்தில் இருந்தே இலங்கையின் நேர்வழிப்படுத்திய பெருமை பௌத்த மதத்துக்கு உண்டு என்று பேசினார்,

அனைத்து இனங்கள் மற்றும் மதங்களின் உரிமைகளும் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றவர்களுக்கு, அதற்கு ஏற்ற சூழல்களை உருவாக்க கொடுக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment