Sunday, March 31, 2013
சென்னை::தே.மு.தி.க. வுக்கு மக்கள் நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள். விஜயகாந்த் தமிழகத்தின் முதல்அமைச்சராவது உறுதி என்று அவரது மனைவி பிரேமலதா பேசியுள்ளார்.
ஈரோடு காளைமாடு சிலை அருகே தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. சட்டசபை எதிர்க்கட்சி கொறடாவும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சந்திரகுமார் உள்பட 6 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நடந்த இந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மனைவி இவ்வாறு பேசினார்.
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்கள் எல்லாவளமும் பெற்று சிறப்பாக இருக்கிறார்களா என்றால் இல்லை. தே.மு.தி.க. வுக்கு யாரையாவது திட்டி ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் இலலை. சட்டசபையில் தங்கள் தொகுதி பிரச்சினைக்ளை- தங்கள் தொகுதியை தன்னி கரில்லா தொகுதியாக மாற்ற வேண்டும் என்பதற்காக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பேசுகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சி எம்.எல். ஏ.க்கள் பேசும் போது மைக்கை ஆப் செய்வது, அவர்களை பேச விடமால் செய்வது, காவலர்களை விட்டு சபையை விட்டு வெளியேற்றுவது போன்ற செயல்கள் நடக்கிறது.
ஈரோட்டை சேர்ந்த சந்திரகுமார், விஜயகாந்த் அடிக்கடி செல்வதை போல அரைக்கால்சட்டை போட்டதில் இருந்து கேப்டன் மன்றத்தில் இருந்து வருகிறார். இவருக்கு விஜய காந்த் கொள்கை பரப்பு செயலாளர் பதவிகொடுத்து உள்ளார். ஈரோடு மக்களின் செல்லப்பிள்ளையாக திகழும் அவர் சட்டசபையில் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். ஈரோட்டில் 12 மணி நேர மின் வெட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 18 மணி நேர மின்வெட்டு உள்ளது. இந்த மின்வெட்டினால், விவசாயம், நெசவு தொழில்கள் உள்பட அனைத்துதொழில்களும் பாதிக்கப்பட்டுஉள்ளன. இதனால் மக்கள் சரியான வேலை இல்லாமல்- வருமானம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.
இந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏழை-எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த ஆட்சி சிறந்த ஆட்சி இலலை. தோல்வி ஆட்சி என்று மக்கள் கூறுகிறார்கள். பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் ஈரோடு பகுதி முழுவதும் மனிதர்கள் நடக்க முடியாமல் ரோடுகள் உள்ளது. பல வருடங்களாகவே நல்ல ரோடுகள் தோண்டப்பட்டு வீணாகி விட்டதாக பொதுமக்கள் குறை கூறுகிறார்கள். கடும் வறட்சியினால் கொங்கு மண்டலமும் கடுமையாக வறட்சி நிலவுகிறது. எனவே இங்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.2500 வழங்க வேண்டும். தமிழக அமைச்சர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி புகழ் பாடுவதையே வழக்கமாக கொண்டு உள்ளனர். அவர்கள் மக்கள் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் மாறி மாறி ஒட்டுபோடுவதை வழக்கமாக கொண்டு உள்ளீர்கள் இதனால் தமிகழத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
எனவே தமிழக மக்கள் விழித்தெழ வேண்டும். இலங்கை பிரச்சினையை காரணம் காட்டி மத்திய மந்திரி சபையில் இருந்து தி.மு.க. விலகி உள்ளது. இதை அப்பவே செய்திருந்தால் இலங்கை தமிழர்களுக்கு இந்த நிலை நேர்ந்து இருக்காது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தொடக்கத்தில் இருந்தே குரல் கொடுத்தவர் விஜயகர்நத் தான். இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்துள்ள அவர் தமிழகதில் உள்ள அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து உள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படுவதை அறிந்த அவர் அவர்களுக்காக தனதுபிறந்தநாளை கொண்டாடுவதையே விட்டு விட்டார். சட்டபையில் மக்கள் பிரச்சிகைளை பேசியவர்களை பதவி நீக்கம் செய்தது, அவர்களை தேர்ந்து எடுத்த தொகுதி மக்களை அவமானப்படுத்தியதற்கு சமம்.
பாராளுமன்றத்தில் தங்கள் தொகுதி பிரச்சினைகளை பேசும் எம்.பி.க்கள் எப்போதும் வெளியேற்றப்பட்டது இல்லை. இந்தியாவிலேயே இது வரை எங்கும் இல்லாத அளவுக்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பணி செய்யக்கூடாது என்று சொல்ல மக்களை தவிரவேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. நீங்கள் எங்களை தடுக்க தடுக்க நாங்கள் வீறு கொண்டு எழுவோம். ஆலமரமாக எழுவோம். தடைகளைதாண்டி வெற்றி படிக்கட்டுகளில் ஏறுவோம். ஒரு சிற்பி சிலைகள் செய்வதற்காக கல்லை செதுக்கினார். அப்போது உளி பட்ட சில கற்கள் வலிக்கிறது என்று கூறியதால் அந்தகற்களை சிற்பி ஒதுக்கிவிட்டு வலியை தாங்கி கொண்ட கல்லை சிற்பி செதுக்கி அழகான தெய்வ சிலைலை உருவாக்கினார். அந்தசிலைகற்ப கிரகத்தில் மூலவராக வைக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட மற்ற கற்கள் படிக்கட்டுகளாக பயன் படுத்தப்பட்டது. இது போல பல வலிகளை தாங்கிய தே.மு.தி.க. வுக்கு மக்கள் நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள். விஜயகாந்த் தமிழகத்தின் முதல்அமைச்சராவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்
No comments:
Post a Comment