Friday, July 12, 2019

சீனாவிடம் பணம் வாங்கிய அமெரிக்க துாதரக அதிகாரிக்கு சிறை!

அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை பணத்துக்காக சீனாவிடம் வழங்கிய துாதரக பெண் அதிகாரிக்கு 40 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.அமெரிக்காவை சேர்ந்தவர் கண்டசி மேரி கிளைபோர்னி 63. அமெரிக்க வெளியுறவு அதிகாரியாக பணியாற்றிவந்தார். இவர் சீனா தலைநகர் பீஜிங் மற்றும் ஷாங்காய் உள்ள அமெரிக்கத துாதரக கிளைகளில் 2007ம் ஆண்டு முதல் அலுவலக நிர்வாகியாக பணியாற்றினார்.
அப்போது சீன பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தை சேர்ந்த இரண்டுபேர் கிளைபோர்னியை சந்தித்துள்ளனர். அவர்களிடம் பல லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை செயல்பாடுகள் குறித்த முக்கிய
ஆவணங்களை வழங்கியுள்ளார்.

இது பற்றிய தகவல் வெளியான நிலையில் இரண்டு ஆண்டுக்கு முன் கிளைபோர்னி கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் அவரிடம் விசாரணை நடத்திய போது 'அரசு அதிகாரி என்ற முறையில் வெளிநாட்டு ஏஜென்டுகளுடன் எனக்கு இருந்த தொடர்பை மறைத்து விட்டேன்; அவர்களிடமிருந்து பணம் பெற்றதையும் நான் தெரிவிக்கவில்லை' என ஒப்பு கொண்டார்.இதையடுத்து கிளைபோர்னி மீது விசாரணை அதிகரிகளை ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிளைபோர்னிக்கு 40 மாத சிறை தண்டனையும் 28 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

No comments:

Post a Comment