Friday, July 12, 2019

சஹ்ரான் (ஐஎஸ்) இலங்கைக்கான முகவராக தன்னை அங்கீகரிக்குமாறு ஐ.எஸ் இடம் கோரியிருந்தார் !

பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு செவ்வாய்க்கிழமை, மாலை அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தலைமையில்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தது.உயிர்த்த ஞாயிறு  தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இதன் போது, அவர்கள்  பிரதமருக்கு விளக்கியுள்ளனர்.
கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோர காவல்படை இருக்கும், ஒரு நாட்டிற்குள் ஊடுருவ முயற்சிக்கும் போது, எந்தவொரு பயங்கரவாதியும் அஞ்சுவர் என்றும் அவர்கள் கூறினர்.
 
புலனாய்வு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை நிறுவி, நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, இந்த சந்திப்பின் போது, பிரதமர் தெரிவித்துள்ளார்.
9/11 தாக்குதலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்களை, குடியியல் நீதிமன்றங்களில் விசாரிப்பதில் தாங்கள் நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டதாக, அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பயங்கரவாதம் என்பது, சாதாரண குடியியல் நீதிமன்ற முறை மூலம் விசாரிக்கப்பட வேண்டிய சாதாரண குற்றம் அல்ல என்றும், அத்தகைய சந்தேக நபர்களைத் தண்டிக்க அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் தேவைப்பட்டதாகவும், அவர்கள் கூறினர்.அடையாளம் காணப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் தொடர்பாக எல்லை கட்டுப்பாட்டு தரவு அமைப்புகளை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் அமெரிக்க நிபுணர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
 
தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் மொஹமட் சஹ்ரான் இஸ்லாமிய அரசின் ஐஎஸ் இலங்கைக்கான  முகவராக தன்னை அங்கீகரிக்குமாறு ஐ.எஸ் இடம் கோரியிருந்தார் என்பதை, அமெரிக்க குழு கண்டுபிடித்திருப்பதாகவும் இதன்போது தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment