Wednesday, August 31, 2011

பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கு சாதகமான பதில்கள் கிடைக்கப் பெறுகின்றன – வெளிவிவகார அமைச்சு!

Wednesday,August,31,2011
சர்வதேச சக்திகளின் குற்றச்சாட்டுக்களை முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு சாதகமான பதில்கள் கிடைக்கப் பெறுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான மனிதாபிமான மீட்புப் பணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.

வெளிநாடுகளுக்கான சகல இலங்கைத் தூதரகங்களுக்கும் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் சில நாட்டு அரசாங்கங்கள் சாதகமான பதிலை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஆணையாளர் நாயகம் சரத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் நன்மதிப்பினை அதிகரிக்கும் வகையில் வெளிநாடுகளில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த அறிக்கை தொடர்பில் கருத்துக்களை எதனையும் வெளியிட முடியாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.

குற்றச் செயல் விசாரணை மற்றும் தண்டனை வழங்குதல் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment