Thursday, October 31, 2013

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் ஒரு துரும்பு கூட கலந்து கொள்ளக் கூடாது: (கரடி புலி) கருணாநிதி!


Thursday, October 31, 2013
சென்னை::இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் ஒரு துரும்பு கூட கலந்துகொள்ளக்கூடாது என (கரடி புலி) கருணாநிதி இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கேள்வி: நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழுவில்; இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப்பதைப் போல செய்திகள் வந்திருக்கிறதே; அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கருணாநிதி :- தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, பத்திரிகைகளில் இன்று வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது பிரதமர் செல்லக் கூடுமென்று யூகிக்கக் கூடிய வகையில் உள்ளது. அப்படி (புலிகளை) தமிழர்களை வேட்டையாடிய சிங்கள வெறியர்கள் நடத்துகின்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை அவர்கள் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரும்.

கேள்வி :- பிரதமருக்குப் பதிலாக வேறு யாராவது இந்தியாவிலிருந்து சென்று அந்த மாநாட்டில் கலந்து கொண்டால்?

கலைஞர் :- இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றால், இந்தியாவைச் சார்ந்த துரும்பு கூட இந்த மாநாட்டிற்குச் செல்லக் கூடாது என்று தான் பொருள்.

கேள்வி :- சட்டப் பேரவையில் இந்தப் பிரச்சினைக்காக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கேற்ப நீங்களும் அதனை ஆதரித்தீர்கள். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அதனை ஆதரித்தார்களா..?
கருணாநிதி :- வினை விதைத்தவர்கள், வினை அறுப்பார்கள்!

கேள்வி :- “டெசோ” அவசரமாகக் கூட்டப்படுமா?

கலைஞர்:- “டெசோ” கூட்டம் நடைபெற்றுத் தான் முதன் முதலில் இதற்கான தீர்மானத்தை நாங்கள் நிறைவேற்றினோம். அதை மீறித் தான் இப்போது காங்கிரஸ் கட்சி அல்லது பிரதமர் செயல்படுகிறார் என்று நான் கருதுகிறேன்.

கேள்வி :- டெல்லியிலிருந்து வருகின்ற தகவல், காங்கிரஸ் கட்சியின் முடிவினை எதிர்த்து மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ராஜினாமா செய்யப் போவதாகச் சொல்லப்படுகிறதே?

கலைஞர் :- அதைப்பற்றி எனக்குத் தெரியாது. செய்தி வந்த பிறகு தான் அதைப் பற்றி கருத்து சொல்ல முடியும். என்று கருணாநிதி தெரிவித்தார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment