Thursday, October 31, 2013

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வது முக்கியமானது: வில்லியம் ஹெக்!

Thursday, October 31, 2013
இலங்கை::இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை புறக்கணித்தால், அது பொதுநலவாய அமைப்பு மீதான பாரிய அழுத்தமாக அமையும் என பிரித்தானியா குறிப்பிடுகின்றது.

சர்வதேச வர்த்தகம் மற்றும் நாடுகளின் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வது முக்கியமானது என பிரித்தானியா வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹெக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா பாராளுமன்றத்தில் உறையாற்றிய போது, வில்லியம் ஹெக் இதனை குறிப்பிட்டுள்ளாதாக பி.பி.சி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெறுவதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, பிரித்தானியா மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென மொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகார செயலாளர் டக்ளஸ் அலக்சான்டர் முன்வைத்த யோசனைக்கு பதிலளிக்கும் வகையில் வில்லியம் ஹெக் இதனைக் கூறியுள்ளார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment