Monday, November 18, 2019

உண்மையான இலங்கையராக என்னுடன் இணையுங்கள் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முழுமையான அவரது உரை;
 
வரலாற்று சிறப்புமிக்க ருவான்வெலி சாயவில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற கிடைத்தமை நான் பெற்ற விசேட பாக்கியம். இந்நாட்டு பெரும்பாளான மக்கள் பெற்றுக் கொடுத்த வரலாற்று ரீதியிலான வெற்றியின் காரணமாக இது இடம்பெற்றுள்ளது.

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள் கோரிக்கை!

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

இந்த பதவிப் பிரமாண நிகழ்வு அனுராதபுரம் ருவான்வெலிசாய மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ருவான்வெலி மண்டபத்தில் இருந்து இந்நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

இந் நிகழ்வில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Thursday, October 31, 2019

17 கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து உருவாக்கிய ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன் கைச்சாத்தானது.
17 கட்சிகள் உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து செயற்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அக்கட்சிகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
 

Wednesday, October 30, 2019

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரசார கூட்டத்தில் வரதராஜப்பெருமாள் ஆற்றிய உரை!

 
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நேற்று (28.10.2010) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தோழர் வரதராஜப்பெருமாள் ஆற்றிய உரை
அன்பார்ந்த தமிழ் மக்களே!
இந்தநாட்டு மக்களை பொறுத்தவரையில் கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் தான் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பது பெரும்பான்மையான மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். அவர் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெற்றுள்ளார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். எதிர்வரும் 16 ஆம் திகதி சட்டபூர்வமாக ஜனாதிபதியாகின்ற ஒரு சம்பிரதாயம் தான் இருக்கப்போகிறது.
இந்த வேளையில் தமிழ் மக்களாகிய நாங்கள் நிதானமாக புத்திபூர்வமாக பகுத்தறிவோடு சிந்தித்து செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த உசுப்பேற்றும் அரசியலை நடத்துபவர்கள் கடைசியில் இரத்தக்களரிகளுக்கே வழிவகுத்திருக்கிறார்கள். இந்தநாட்டில் தமிழ் மக்களுக்கு ஒரு போராட்டம் தேவைப்பட்டது என்பது உண்மை அந்தப்போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் பலர் இந்த மேடையில் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவனாக நானும் இருக்கிறேன் இந்த சபையிலும் பலர் இருக்கிறார்கள் அது ஒரு காலத்தின் தேவையாக இருந்தது இந்தநாட்டிலே தமிழ் மக்களுக்கு ஒரு உருப்படியான ஒரு அரசியல்தீர்வு கிடைக்கவில்லை என்பதனால் தான் கோரிக்கைகள் மேலும் மேலும் மேலும் மேலே போய் அதற்கான ஒரு போரும் போராட்டமும் நடக்கவேண்டி ஏற்பட்டது.
ஆனால், 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தோடு வந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை நாங்கள் காப்பாற்றியிருந்தால் அதை பாதுகாத்திருந்தால் அதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் இன்றைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
அதற்கு பிந்திய 25 வருடங்களில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை பலிகொடுத்திருக்கிறோம். தெற்கிலும் மக்களும், பல ஆயிரக்கணக்கான படையினரும் பலியாகியிருக்கிறார்கள் 1990 முதல் 2009 வரை மரணத்தை தவிர வேறு எதுவும் தமிழ் மக்கள் கண்டதில்லை. 2009 இற்கு பின்பு இன்று வரை யுத்தம் நடைபெற்றிருந்தாலும் அரசியல் தீர்வோ, சமாதானமோ வந்திருக்குமா? வந்திருக்காது. இன்னும் இலட்சக்கணக்கான மக்களும், இளைஞர்களும் பலியாகியிருப்பார்கள் இழப்புக்களே மிஞ்சியிருக்கும்.
யுத்தம் முடிவடைந்து விட்டது.
 
யுத்தம் பல துன்பியல் விளைவுகளை தந்து முடிந்திருக்கிறது. அவற்றைப்பற்றி நாங்கள் ஒப்பாரி வைத்துக்கொண்டேயிருக்க முடியாது. எதிர்காலம் நோக்கி நாங்கள் செல்ல வேண்டும். இந்த நாட்டில் தான் ஒரே நாட்டில் தான் ஐக்கியமாக சமாதானமாக சகோதரத்துவத்தோடு வாழ வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம். அதனை நாங்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். இந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி நாங்கள் பாதுகாப்பை தேட முடியாது. போகக் கூடியவர்கள் போய்விடுவார்கள். இந்த நாட்டில் இருப்பவர்கள் இந்த நாட்டில் உள்ள சிங்கள மக்களோடும், முஸ்லிம் மக்களோடும் சகோதரத்துவத்தோடு வாழ வேண்டும். ஆனால், சமாதானம் அற்றவர்களாக அல்ல. சமத்துவம் அற்றவர்களாக அல்ல. சம நீதி அற்றவர்களாக அல்ல சமத்துவமாகவும், சம நீதியோடும், பாதுகாப்போடும் சகோதரத்துவத்தோடும் வாழுகின்ற ஒரு நிலைமை ஏற்பட வேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.
அவ்வாறான ஒரு நிலைமையை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்படுத்தித் தருவார்கள் என்று நினைக்கிறோம். அதற்காக முதற்கட்டமாக நாங்கள் அனைவரும் எதிர்வரும் 16 ஆம் திகதி தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதியாக்கி ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம். 

Tuesday, August 20, 2019

இலங்கை – இந்தியா பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த சேவையை மீள ஆரம்பித்த போதும் நடைமுறை சிக்கல்களால் நிறுத்தப்பட்டது. எனினும் இதனை மீள நடத்துவதன் மூலம் பயணிகள் போன்று பொருட்களின் பரிமாற்றத்துக்கும் அத்தியாவசியமானதாக அமையும்.
அத்துடன் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தி அடையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்!

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத் தளபதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று  (19) திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
1984 ஆம் ஆண்டு கெடட் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட சவேந்திரசில்வா இராணுவ படைகளின் பிரதானியாகவும் கடைமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thursday, July 18, 2019

அமெரிக்கா ஆயுத விற்பனை ஈரான் எதிர்ப்பு!

டெஹ்ரான், அமெரிக்கா ஏவுகணை சோதனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அவர்கள் ஈரான் பகுதியில் ஆயுதங்கள் விற்கக்கூடாது , என அறிவித்துள்ளது.இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரிப் கூறும்போது, “அமெரிக்கா எங்களுடன் ஏவுகணை சோதனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அவர்கள் ஆயுதங்கள், ஏவுகணைகளை எங்கள் பகுதியில் விற்பதை நிறுத்த வேண்டும்” என்றார்.ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்பாஸ், பந்து தற்போது அமெரிக்காவில் வீசப்பட்டிருக்கிறது. அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது குறிப்பிடத்தக்கது.

60 இடங்களில் பணம் பதுக்கல் துரைமுருகன் தரப்பு மீது ஏ.சி.சண்முகம் புகார்!

குடியாத்தம், ''கடந்த தேர்தலில் செய்த அதே தவறை மீண்டும் தி.மு.க., வினர்செய்கின்றனர். இப்போது 60 இடங்களில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்'' என வேலுார்தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கூறினார்.குடியாத்தத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:கடந்த முறை தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் கோடி கோடியாக பணத்தை பதுக்கி வைத்திருந்தார். கணக்கில் வராத 10 கோடி ரூபாய்க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது.அப்போது 50 - 60 கோடி ரூபாயைதுரைமுருகன் வீட்டின் பின்பக்கமாக எடுத்துச் சென்று விட்டனர். மீண்டும் அதே தவறை தி.மு.க. வினர் செய்கின்றனர். இப்போது 60 இடங்களில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். சமீபத்தில்

Wednesday, July 17, 2019

கிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்!

கிரீஸ் நாட்டில் பயணிகள் விமானம் ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக வழக்கத்தை விட தாழ்வாக, கடற்கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் தலையை உரசும் அளவுக்கு விமானம் தாழ்வாக பறந்தது. ஏதென்ஸ்:கிரீஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஸ்கியாதோஸ் தீவில் கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் அமைந்துள்ளது. கடற் கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் தரையிறங்க வரும் விமானங்கள் மிகவும் தாழ்வாக பறக்கும்போது அதன் கீழ்பகுதியில் நின்று ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அப்படி விமானங்கள் தரையிறங்கும்போது, விமான என்ஜின்களில் இருந்து வெளிப்படும் வேக காற்றினால் சுற்றுலா பயணிகள் தூக்கி வீசப்பட்டு

எதற்கும் தயாராக உள்ளோம்: இந்திய விமானப்படை தளபதி!

எந்த வகையான சூழ்நிலையிலும் உடனடியாக களமிறங்க விமானப் படை எப்போதும் தயாராக உள்ளது' என விமானப் படை தலைமை தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கார்கிலில் நடந்த போரின் 20வது ஆண்டையொட்டி டில்லியில் நேற்று(ஜூலை 16) நடந்த கருத்தரங்கில் விமானப் படையின் தலைமை தளபதி தனோவா கூறியதாவது: கடந்த 1999ல் நடந்த கார்கில் போரில் 17வது ஸ்குவாட்ரனின் தலைவராக பங்கேற்றேன். அப்போது நமது விமானப் படைக்கு பல்வேறு பிரச்னைகள் இருந்தன. மிராஜ் - 2000 போர் விமானத்தில் மட்டுமே குண்டு திறன் இருந்தது. தற்போது நமது அனைத்து விமானங்களிலும் இந்த வசதி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் நாம் பல முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.கார்கில் போரின்போது இக்கட்டான கட்டத்தில் இரவு நேரத்தில்

ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றி நிச்சயம்: பொதுஜன பெரமுன உறுதி!

மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் கூடிய பாராளுமன்ற அதிகாரத்துடன் கூடிய ஜனாதிபதியின் கீழ் எதிர்வரும் 2020 சித்திரைப் புத்தாண்டை எதிர்கொள்ளவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் புதிய ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். எமது ஜனாதிபதி வேட்பாளர், இந்த நாட்டு அரசியல் வரலாற்றில் சாதனை படைக்கும் வெற்றியொன்றை பதிவு செய்வார் என நாம் நம்புகின்றோம்.இதனையடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு

ரகசிய சந்திப்பில் ரவி- மஹிந்த?

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு அம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லமான கால்ட்டனில் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.இந்த சந்திப்பில் என்னென்ன விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும், அக்கட்சியின் உப தலைவரான அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையே கருத்து மோதல் இருப்பது தற்போது வெளிப்படையாகவே மேடைகளில் பேசப்படுகிறது.

Monday, July 15, 2019

தமிழகத்தில் IS பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தும் அபாயம்?

கோவையை அடுத்து தற்போது சென்னை மற்றும் நாகையில் அடுத்தடுத்து பயங்கரவாதத் தொடர்புள்ள நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தும் அபாயம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.என்.ஐ.ஏ., வேட்டை :-இந்தியாவில் உளவுப்பிரிவினரும், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகளும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பு கோரத்தில், 259 பேர் உயிரிழந்த பின்னர் இந்திய உளவுத்துறை உஷாராகியுள்ளது. கோட்டை விட்ட இலங்கை :ஏனெனில் முன்கூட்டியே எச்சரித்தும், இலங்கை உளவுத்துறை கோட்டை விட்டதால் இலங்கை குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது.

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி வாகை சூடியது இங்கிலாந்து அணி!

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன் அடித்தது. பின்னர் 242 ரன்கள் அடித்தால் உலகக்கோப்பையை கைபற்றிவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 17 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோவ் 36 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஜோ ரூட் 7 ரன்னிலும், மோர்கன் 9 ரன்னிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

வடக்கில் சென்று “கார்ட்போர்ட்” வீரர்கள்!

வடக்கில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் உயிருக்குப் பயந்து கொழும்பிலுள்ள குளிரூட்டப்பட்ட அறைகளில் காலத்தைக் கடத்தியவர்கள் இன்று வடக்கில் சென்று “கார்ட்போர்ட்” வீரர்கள்  போன்று செயற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது யார் என்பதைக் கூட இந்த மக்கள் மறந்துள்ளனர். இந்த கார்ட்போர்ட் வீரர்கள் வடக்கு மக்களைக் காப்பாற்றியவர்கள் போன்று செயற்பட்டு வருகின்றனர். யார் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் உண்மை நிலைமை எது

Sunday, July 14, 2019

தமிழிசைக்கு தேசிய அளவில் பதவி... தமிழக பாஜக தலைவராகும் புதுமுகம்!

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தமிழிசை நீக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்ற பாஜக தமிழகம், ஆந்திரா, கேரளாவில் மட்டும் படுதோல்வியை சந்தித்து. மேற்கு வங்கத்தில் வெற்றி வாகை சூடியது. தெலுங்கானாவில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வாக்குகளை பெற்றது. இதனை அடுத்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தென் மாநிலங்களில் தனது கட்டமைப்பை வலுப்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளாவில் பாஜகவை வலுவாக காலூன்றச் செய்ய பல்வேறு வியூகங்களை அமித் ஷா வகுத்து வருகிறார். அதன்படி தமிழக பாஜகவிற்கு புதுமுகம் ஒருவரை தலைவராக நியமிப்பது தொடர்பாக ஆலோசித்து வரப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணைகளை இரகசியமான முறையில் மேற்கொள்ள தீர்மானம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எதிர்வரும் 24ஆம் திகதி புலனாய்வுத்துறை அதிகாரிகளின் சாட்சிப் பதிவுகளை இரகசியமான முறையில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.இது குறித்து விசேட வேலைத்திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்த அமர்வை அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.இதேநேரம், புலனாய்வுத்துறை அதிகாரிகளை புகைப்படம் எடுப்பதற்கும் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வேலூரில் புயல் வேகத்தில் தேர்தல் பணி... திமுகவிற்கு பீதி கிளப்பம் ஏ.சி. சண்முகம்!

வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அதாவது தேர்தல் தேதி அறிவித்த அன்றே செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் பணிகளை துவக்கினார் ஏ.சி. சண்முகம்.
பணப்புழக்கம் அதிகம் இருந்ததாகவும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறி வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. சுமார் 13 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியது. இந்த பணம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு சொந்தமானது என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தல் ரத்தால் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டது அதிமுக சார்பில் களம் இறங்கிய ஏசி சண்முகம் தான்.
ஏனென்றால் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நாள் வரை கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வரை அவர்

Friday, July 12, 2019

ராகுல் பிடிவாதம் எதிரொலி- சோனியாவை மீண்டும் தலைவராக்க முயற்சி!

பல தடவை சமரசம் செய்தும் ராகுல்காந்தி மனம் மாறாததை அடுத்து தலைவர் பதவியை ஏற்கும்படி சோனியாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியதால் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பல தடவை சமரசம் செய்தும் ராகுல்காந்தி மனம் மாறவில்லை. சொந்த தொகுதியான அமேதியில் தோல்வி அடைந்ததால் தலைவர் பதவி வேண்டாம் என்பதில் அவர் பிடிவாதமாக உள்ளார்.தனது குடும்பத்தில் இருந்தும் யாரையும் தலைவர்

சஹ்ரான் (ஐஎஸ்) இலங்கைக்கான முகவராக தன்னை அங்கீகரிக்குமாறு ஐ.எஸ் இடம் கோரியிருந்தார் !

பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு செவ்வாய்க்கிழமை, மாலை அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தலைமையில்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தது.உயிர்த்த ஞாயிறு  தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இதன் போது, அவர்கள்  பிரதமருக்கு விளக்கியுள்ளனர்.