Saturday, March 30, 2013

பெபிலியானையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் 6 பேர் கைது

Saturday, March 30, 2013
இலங்கை::பெபிலியானையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

மிரியான விசேட விசாரணை பிரிவினரால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்.

இதற்கிடையில் சம்பவம் தொடர்பில் மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தலையிலான நான்கு குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இடம்பெறுகின்ற இலங்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அரசியல் லாபத்துக்காக நடத்தப்படுவதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை கண்டனம் தெரிவித்துள்ளது!

Saturday, March 30, 2013
புதுடெல்லி::தமிழகத்தில் இடம்பெறுகின்ற இலங்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அரசியல் லாபத்துக்காக நடத்தப்படுவதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கையுடனான நட்புறவை இடைநிறுத்துமாறும், தமிழீழத்துக்காக கருத்துக்கணிப்பை நடத்தவும், பொருளாதார தடையை ஏற்படுத்தவும், தமிழ்நாட்டு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்சித் நேற்று அறிவித்திருந்தார்.

இதேகருத்தையே இந்துஸ்தான் டைம்ஸ{ம் வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன் தமிழ்நாட்டு அரசாங்கம் இலங்கை கிரிக்கட்வீரர்களுக்கும் தடை விதித்துள்ளமையையும், ஹிந்துஸ்தான் பத்திரிகை கண்டித்துள்ளது.

விளையாட்டுத்துறையையும், அரசியலையும் இணைக்க கூடாது என்று அது சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை யுத்தத்தின் பின்னர் இலங்கையில் தமிழர்கள் சகல உரிமைகளுடன் பிரச்சினைகள் இன்றி வாழ்வதாக, முன்னாள் இலங்கை கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தையும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் வரவேற்றுள்ளது.

விஷவாயு கசிவு எதிரொலி : ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு!

Saturday, March 30, 2013
தூத்துக்குடி::தூத்துக்குடியில் விஷவாயு கசிவுக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஆலை இன்று உடனடியாக மூடப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடியில் கடந்த 23ம் தேதி அதிகாலை திடீரென்று காற்றில் விஷவாயு கலந்தது. இதனால் பலருக்கு கண்ணெரிச்சல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டது. கடற்கரை ரோடு, ரோச் பூங்கா, திருச்செந்தூர் ரோடு, ஜார்ஜ் ரோடு, மார்க்கெட் பகுதிகளில் நடை பயிற்சி சென்றவர்களும் தொண்டை வலி, தொடர் இருமலால் அவதிப்பட்டனர். சிப்காட் பகுதியில் இருந்து விஷவாயு பரவியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்து ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷவாயு கசிந்ததை உறுதி செய்தனர். பின்னர் இதுகுறித்து கலெக்டரிடமும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் அறிக்கை அளித்தனர்.

இதற்கிடையில், விஷவாயு கசிவுக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை கடந்த 25ம் தேதி மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது 200 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் கடந்த 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை போராட்டத்தை வைகோ அறவித்திருந்தார். அன்று வைகோ தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் மீனவர் அமைப்பினர் உள்ளிட்ட ஆயிரக்ணக்கானோர் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று நள்ளிரவு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தூத்துக்குடி வருவாய்த் துறை அலுவலர்களும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களும் ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அந்த ஆலையின் வாசலில் இன்று காலை 10 மணிக்கு ஒட்டினர். இதையடுத்து அந்த ஆலைக்கு மின் சப்ளை மற்றும் குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கலெக்டர் உறுதி:

தூத்துக்குடி கலெக்டர் ஆசிஷ்குமார் கூறியதாவது:

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சல்பர் டை ஆக்சைடு வாயு வெளியேறியது உறுதி செய்யப்பட்டது. மேலும் சுப்ரீம் கோர்ட் நிர்ணயித்த அளவை விட அளவுக்கு அதிகமாக அந்த வாயு வெளியேற்றப்பட்டதன் மூலம் விதிமீறல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த அறிக்கை சென்னையிலுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வைத்தோம். மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், மின்வாரியம் ஆகியவை இணைந்து இதனை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு அல்லது நாளை காலைக்குள் முழுமையாக மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவு செயல்படுத்தப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு

தூத்துக்குடியில் 1992ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். ஆரம்பத்தில் தனியார் ஓட்டலில் ஒரு தளத்தில் இயங்கிய ஸ்டெர்லைட் நிர்வாக அலுவலகம் 1995ம் ஆண்டில் இருந்து ரூ.1500 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிப்காட்டுக்கு இடம் பெயர்ந்தது. அந்த ஆண்டிலேயே ஆலையில் உற்பத்தி தொடங்கியது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தொடக்கத்தில் இருந்தே தூத்துக்குடி மக்களிடையே குறிப்பாக மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. 1997ம் ஆண்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இந்த ஆலையை எதிர்த்து நடைபயணம் சென்றார். பின்னர் இந்த ஆலையை மூடக் கோரி சென்னை ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

1600 கோடி வருவாய் இழப்பு:

லண்டனை தலைமையிடமாக கொண்ட வேதாந்தா குழுமத்தின் ஒரு அங்கமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இங்கு தாமிரம், காப்பர் கேதோடு, பாஸ்பாரிக் அமிலம், சல்பியூரிக், ஜிப்சம், பெர்ரோசாண்ட் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலையில் நேரடியாக 6,000 தொழிலாளிகளும், மறைமுகமாக 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் பணியாற்றுகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூலம் அரசுக்கு ஆண்டு வரி வருவாய் ரூ.1600 கோடி கிடைத்தது. இந்த ஆலைக்கு தேவையான மூலப்பொருட்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்படுகிறது. ஆலையில் இருந்து பொருட்களை எடுத்து செல்ல 600 லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்டெர்லைட் ஆலையின் உற்பத்தி பொருட்களை நம்பி தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட சிறிய துணை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதால் தாய் நாட்டிற்கான சுதந்திரம் கிட்டியுள்ளது - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Saturday, March 30, 2013
இலங்கை::குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாட்டுக்குள் இன பேதத்தையும் மத பேதத்தையும் ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும் அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் பொறுப்பை நிவைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தசாப்த பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் அனைத்து இன மக்களும் வாழ்கின்ற தாய் நாட்டிற்கான சுதந்திரமே கிட்டியதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பேருவளை பிரதேசத்திலுள்ள விஹாரையொன்றில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் குரோதத்தை ஒழித்து எதிர்கால சந்ததியினருக்காக சமாதானமும் நல்லிணக்கமும் நிறைந்த நாட்டினை உருவாக்குவதற்கு வைகோர்க்க வேண்டியது அனைவரினதும் கடமை
எனவும் கூறியுள்ளார்.

சகல மக்களும் பாதுகாக்கப்படுவார்கள்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

இன, மத, பேதம் ஆகியவை தெடர்பான பிரச்சினைகள் ஏற்பட அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்;.


பேருவளையில் நேற்றிடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நாடொன்றின் ஒழுக்கம் மிக முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சகல இன மக்களையும் பாதுகாக்க வேண்டியது தமது பொறுப்பு எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எம்.பி.யின் கிளிநொச்சி வாகனங்கள், அறிவகம் அலுவலகம் மீது தாக்குதல்!

Saturday, March 30, 2013
இலங்கை::தமிழ்த் தேசிய  (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எம்.பி.யின் கிளிநொச்சி வாகனங்கள், அறிவகம் அலுவலகம் மீது தாக்குதல்!

தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எம்.பி.யின் கிளிநொச்சி அறிவகம் அலுவலகம் மீது கறுப்பு நிற முகமூடி அணிந்து சென்றுள்ள பொது மக்கள் சிலர் இன்று முற்பகல் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், குறித்த அலுவலகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (புலி)கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் மற்றும் எஸ்.சிறிதரன் ஆகியோரின் வாகனங்கள் மீதும் மேற்படி  கற்களை வீசி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் அறிவகம் அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் கலந்துரையாடலின் போண்து அங்கு  நுழைந்துள்ள பொது மக்கள்   தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

தேசிய கொடிகளுடன் வந்த கறுப்பு முகமூடி அணிந்த பொது மக்களே  இவ்வாறு தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அவ்வாறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்களில் இருவர்  பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போதும் அவ்விருவரையும் பொலிஸார் விடுவித்ததாகவும் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  (புலி)பிரேமசந்திரன் தெரிவித்தார்...

கிளிநொச்சி நகரில் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் கூட்டத்திற்கு இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


பேரணியாக வந்த சிலர் தமது கூட்டத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைபின் பாராளுமன்ற உறுபபினர் ஈ.சரவணபவன்  தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு (புலிகளுக்கு)ஆதரவாக திருநங்கைகள் உண்ணாவிரதம்!

Saturday, March 30, 2013
சென்னை::இலங்கை தமிழர்களுக்கு  (புலிகளுக்கு) ஆதரவாக தமிழ்நாட்டில் கடந்த 1 மாதமாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள், சினிமா துறையினர், தமிழ் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போது திருநங்கைகளும் இலங்கை தமிழர்களுக்கு (புலிகளுக்கு) ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே இன்று திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் வடசென்னை பகுதியில் உள்ள திருநங்கைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

புலிகளுக்கு ஆதரவான தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தினேஷ் ஆகியோர் தலைமையில் இன்று காலை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் எந்த மாநிலத்திலும் இலங்கை வீரர்கள் விளையாட கூடாது என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இலங்கைக்கு எதிராக மாணவர்கள் கண்டன கோஷங்களும் எழுப்பினர்.