Tuesday, August 30, 2011

அமெரிக்கா:இங்கிலாந்து:இந்தியாவின் நெருக்குதலால் தான் எனது சகோதரர் மகிந்த ராஜபக்ச அவசரகாலச் சட்டத்தை எடுத்தார் என்று சொல்வது தவறு.கோத்தபாய ராஜபக்ச!

Tuesday, August 30, 2011
அமெரிக்கா:இங்கிலாந்து:மற்றும் இந்தியாவின் நெருக்குதலால் தான் எனது சகோதரர் மகிந்த ராஜபக்ச அவசரகாலச் சட்டத்தை எடுத்தார் என்று சொல்வது தவறு. அவர் யாருக்கும் பயப்படுபவரில்லை. அவர் எப்போதும் பயப்படப் போவதுமில்லை என்று கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

கடந்த வாரம் கிறீஸ் பூத விவகாரம் தொடர்பாக முஸ்லீம் சமூகத் தலைவர்களையும் முஸ்லீம் மதத் தலைவர்களையும் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச,

அதேபோல அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக அரசாங்கமே கிறீஸ் பூதம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது என்ற புரளியும் நாட்டில் பரவியுள்ளது.

ஆனால் உண்மை என்னவென்றால் எங்களுடைய அரசாங்கத்திற்கு அப்படிச் செய்ய வேண்டிய தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நாட்டுக் நண்மை பயக்க என்ன செய்ய வேண்டும் என்பது எனது சகோதரினிற்குத் தெரியும் அதனால் தான் அவர் பாராளுமன்றத்தின் உதவியுடன் அவசரகாலச் சட்டத்திற்கு முடிவு கட்டியுள்ளார் எனத் தெரிவித்த கோத்தபாயவிடம்,

படைகளும் அரசும் கிறீஸ் பூத விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியை வெளியிட்ட மேற்படி முஸ்லீம் தலைவர்கள் கிறீஸ் பூத விவகாரத்தில் 25வீதம் உண்மையாக சம்பவங்கள் இடம்பெற அதையொட்டிய வதந்தி 75 வீதமாக இருக்கிறதென்றும் எனினும் அந்த 25வீத உண்மைச் சம்பங்களும் ஆராயப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் பயணம் 4 இலங்கை தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

Tuesday, August 30, 2011
சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை தனியார் விமானம் ஒன்று சென்னைக்கு வந்தது. அதில் இருந்து இறங்கிய 4 வாலிபர்கள் மொட்டையடித்து இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது 4 பேரும் போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் போரூரை சேர்ந்த ராஜேந்திரன், கும்மிடிப் பூண்டியை சேர்ந்த சசிகுமார், ஸ்ரீராம், திருச்சி கே.கே.நகரை சேர்ந்த செந்தூரன் என்பதும் 4 பேரும் அங்குள்ள அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் என்பதும் தெரியவந்தது.

அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, சிங்கப்பூரை சேர்ந்த ஏஜெண்டு ஜீவா என்பவர் எங்களிடம் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி தலா ரூ.2 1/2 லட்சம் வாங்கிக் கொண்டு போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் அழைத்துச் சென்றார்.

பின்னர் அங்குள்ள ஓட்டலில் 4 நாட்கள் தங்க வைத்தார். பின்னர் எங்களை ஓட்டலில் விட்டு விட்டு தப்பி சென்று விட்டார். அங்கு அனாதையாக திரிந்த எங்களை சிங்கப்பூர் போலீசார் கைது செய்து 45 நாட்கள் சிறையில் அடைத்தனர். ஜெயிலில் இருந்து வெளிவந்ததும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். இங்கு வந்ததும் விமான நிலைய அதிகாரிகள் நாங்கள் போலி பாஸ்போர்ட் வைத்திருப்பதாக கூறி கைது செய்து விட்டனர் என்றனர். பிடிபட்ட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

இலங்கையர் இன்டர்போலினால் கைது!

Tuesday, August 30, 2011
இலங்கைக்கு டயோனியல் குளோரைட் எனும் இரசாயன பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் காரணமாக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த ஒருவர், சென்னை வானூர்தி நிலையத்தில் வைத்து இன்டர்போலினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கென்யூட் சிறிபாலன் பீரிஸ் அல்லது கனீ பீரிஸ் என்பவருக்கு இலங்கை நீதிமன்றமொன்று பிடிவிறாந்து பிறப்பித்திருந்தது.

தற்போது அவரை இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து இன்டர்போல் அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடி வருவதாக இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொஸ்கமவிலுள்ள பொம்மை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றின் பயன்பாட்டிற்காக என்ற போர்வையில் இந்த இரசாயனப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
எனினும் நச்சுப் பானமொன்றுக்காக அது இறக்குமதி செய்யப்பட்டிருந்தமை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரதேச சபைத் தலைவரை படுகொலை செய்ததாக ஊர்காவற்றுறையில் மாணவர் கைது!

Tuesday, August 30, 2011
பதினொரு வயதில் பிரதேச சபைத்தலைவரை படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டி பாடசாலை மாணவனொருவன் ஊர்காவற்றுறை தம்பாட்டி பகுதியினில் கைது செய்யப்பட்டுள்ளான். எனினும் ஊர் மக்களிடையே எழுந்த கடும் எதிர்ப்பினையடுத்து கைது செய்யப்பட்ட மாணவன் இன்று விடுவிக்கப்பட்டுள்ளான். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தினில் இருந்து வந்த குற்றப்புலனாய்வுப்பிரிவு பொலிஸாரே நேற்றிரவு இம்மாணவனை கைது செய்துள்ளனர்.

16 வயதுடைய கிருஸ்ணகுமார் மணி எனும் மாணவனே கைது செய்யப்பட்டுள்ளான். சுமார் ஜந்து வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருந்த ஈபிடிபி கட்சியின் பிரதேச சபைத்தலைவரொருவரது மரணத்துடன் இம்மாணவன் தொடர்பு பட்டிருந்ததாக பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து ஏற்பட்டிருந்த இழுபறிகளையடுத்து காலை இம்மாணவன் விடுவ்க்கப்பட்டுள்ளான். எனினும் அண்மையில் இப்பகுதியினில் சர்ச்சைக்குரிய வகையினில் புலிக்கொடி பறக்க விடப்பட்ட சம்பவம் தொடர்பினில் இக்கைது இடம்பெற்றிருக்கலாமென சந்கேகிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி நிராகரித்த பிறகு தூக்கு தண்டனையை நிறுத்த முடியாது; எழுத்தாளர் “சோ” கருத்து!

Tuesday, August 30, 2011
ராஜீவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து இனி காப்பாற்ற முடியுமா? முடியாதா? என்ற சர்ச்சை வலுத்து வருகிறது. இதுபற்றி எழுத்தாளர் “சோ”விடம் கருத்து கேட்ட போது, அவர் கூறியதாவது:-

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தப்பிறகு மீண்டும் அதில் தலையிட மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. இதை தவிர சில விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். ஏற்கனவே மாநில அரசு, இந்த கருணை மனுவை நிராகரித்துள்ளது. அது கலைஞர் அரசு செய்த காரியம். இப்போது ஜனாதிபதி நிராகரித்த நிலையில் மாநில அரசு அதில் தலையிட முடியாது.

கேள்வி:- கேரளா, ஆந்திராவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தப்பிறகும் மத்திய அரசு மூலம் அவர்கள் காப்பாற்றப்பட்டதாக டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

பதில்:- நீங்கள் சுட்டிக் காட்டுக்கிற ராமதாசின் பேச்சிலேயே கூட ஜனாதிபதி நிராகரித்தப்பிறகு மாநில அரசு கருணை மனுவை ஏற்றதாக சொல்லப்படவில்லை. மீண்டும் மத்திய அரசுதான் பரிசீலனை செய்ததாக அவர் சொல்லி உள்ளார். இந்த நிலையில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் இந்த பேச்சிலும் உறுதியாகிறது.

கே:- இனி 3 பேரையும் காப்பாற்ற வழி இருப்பதாக தெரிகிறதா?

ப:- மரண தண்டனையையே இனி கிடையாது என்றால்தான் இதுவும் நிற்கலாம்.

இவ்வாறு “சோ” கூறினார்.

ஐகோர்ட்டு வக்கீல் வானதி சீனிவாசன் கூறியதாவது:-

திட்டமிட்டு மற்றும் மனி தாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட கொலை குற்ற வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து தூக்கு தண்டனையை உறுதி செய்து ஜனாதிபதியும் கருணை மனுவை நிராகரித்த பிறகு அந்த தண்டனையை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கோ, மத்திய அரசுக்கோ கிடையாது. சுப்ரீம் கோர்ட்டும் தண்டனையை உறுதி செய்த பிறகு மீண்டும் மறுபரிசீலனை செய்ய முடியாது.

வேண்டுமென்றால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட விதம், கையாளப்பட்ட வழிமுறைகள் தவறு என்று வாதிடலாம். அதுபற்றி கோர்ட்டும் விளக்கம் கேட்க வாய்ப்பு உண்டு. இதனால் தண்டனையை நிறைவேற்றும் காலம் வேண்டுமென்றால் தள்ளிப்போகலாம். ஆனால் தண்டனையை குறைக்கவோ, ரத்து செய்யவோ அதிகாரம் இல்லை. இருந்தாலும் சில வழக்கு களில் தண்டனை குறைக்கப்பட்டும் உள்ளது.

1990-ல் உ.பி.யைச் சேர்ந்த ஜும்மான்கான் என்பவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்ட னையை உறுதி செய்தது. அவர் அனுப்பிய கருணை மனு மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லாத காலதாமதம் ஏற்பட்டு இருந்ததால் சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. அதேபோல் 1991-ல் தயாசிங் என்பவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்ட னையை உறுதி செய்தது. அவர் போட்ட முதல் கருணை மனு தள்ளுபடி ஆனது.

2-வது கருணை மனு மீது 2 வருடமாக நடவடிக்கை எடுக்கவில்லை. முதல் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதை வைத்து தயாசிங்கை தூக்கில் போட்டி ருக்கலாம். அனால் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் டில் மனுதாக்கல் செய்து கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. கருணை மனு கால தாமதம் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் சுப்ரீம் கோர்ட்டு தண்டனையை குறைத்து விடாது. காலதாதம், குற்றத்தின் தன்மையையும் பரிசீலித்து முடிவு செய்யும்.

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ள கருத்து வருமாறு:-

கருணை மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகி யோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறுத்த முடியாது. இதை தடுத்து நிறுத்த அரசியல் சட்டப்படி யாருக்கும் அதிகாரம் கிடையாது. இந்த விஷயத்தில் முதல்- அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து மிகவும் சரியானது. இந்த பிரச்சினை மீதான அரசியல் சட்ட நிலையை அவர் சரியாக புரிந்து விளக்கி உள்ளார்.

நளினிக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைப்பு சட்ட விரோதமானது. அரசியல் சட்டத்துக்கு புறம்பானது. சட்டத்தில் இது மோசமானது. எனவே, சட் டத்தில் மேற்கொண்டு யாருடைய தலையீடும் இருக்கக்கூடாது. 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை வருகிற 9-ந்தேதி நிறைவேற்றப்பட வேண்டும். தீவிரவாத அச்சுறுத்தல் கொண்ட நமது நாடு, மென்மையான போக்கை கடைப்பிடிக்காது என்பதை உணர்த்த வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.

ராஜுவ் காந்தி கொலை வழக்கு : 3 பேரை தூக்கிலிட 8 வாரம் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்!.

இதெல்லாம் ஒரு தீர்ப்பா..... ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப் பட வேண்டும்.....

Tuesday, August 30, 2011
சென்னை : ராஜுவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய 3 பேரை தூக்கிலிட 8 வாரம் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சநங்கரநாராயணன் தடை விதித்து உத்தரவிட்டனர். தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி மூவரும் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். மூவரையும் தூக்கிலிட செப்.,9 ந் தேதி நிர்ணயிக்கப் பட்டிருந்தது. உயர்நீதிமன்ற தடையை அடுத்து தூக்கிலிடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றத் தடை உத்தரவை வேலூர் சிறை நிர்வாகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தங்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக்கோரி அவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நேற்று தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பேரறிவாளன் சார்பில் வக்கீல் தடா சந்திரசேகரன், சாந்தன், முருகன் சார்பில் வக்கீல் வைகை ஆகியோர் நேற்று மனுக்களை தாக்கல் செய்தனர்.

அப்போது நீதிபதி பால் வசந்தகுமார் முன்பு வக்கீல் தடா சந்திரசேகரன் ஆஜராகி, ’’தூக்கு தண்டனை பிரச்சினை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால் அதன் முக்கியத்துவம் கருதி மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, இந்த மனுக்கள் அவசர வழக்காக ஏற்கப்படுவதாகவும், விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என்றும் நீதிபதி பால் வசந்தகுமார் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து வருகிறது. மனுதாரர்கள் சார்பில் டெல்லியை சேர்ந்த பிரபல மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, மும்பை மூத்த வக்கீல்கள் மோகீத் சவுத்ரி, காலின் சால்வேல்ஸ் ஆகியோர் ஆஜராகினர். துரைசாமி, சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வைகோ, அற்புதம்மாள் மற்றும் பல தமிழ் ஆர்வலர்களும் ஐகோர்ட்டில் குழுமினர். மனு மீதான விசாரணையில், மூவரின் தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.