Thursday, January 26, 2017

இந்தியாவின் குடியரசு தின விழா!


மறைந்த பத்திரிகையாளர் 'சோ' ராமசாமி உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள்!

புதுடெல்லி -மறைந்த பத்திரிகையாளர் 'சோ' ராமசாமி, பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்ம விருதுகள் அறிவிப்பு
குடிமக்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய கவுரவமான பத்ம விருதுகளை நேற்று மத்திய அரசு அறிவித்தது. குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படும் இந்த விருதுகளை மார்ச் அல்லது  ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவிப்பார்.
யேசுதாசுக்கு...
திரையிசையில் பல்லாண்டுகளாக கோலோச்சி வரும் பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு, நாட்டின் இரண்டாவது உயரிய கவுரவமாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஒலிம்பிக் சாதனையாளர் சாக்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், வட்டு எறியும் வீரர் விகாஸ் கவுடா, ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஆகியோர் விளையாட்டுப் பிரிவில் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.
பத்ம விபூஷண் விருது
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 7 பேருக்கு பத்ம பூஷன் விருது மற்றும் 75 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 19 பேர் பெண்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் உட்பட 7 பேர் வெளிநாட்டினர். 9 பேருக்கு இறப்புக்கு பின் இந்த உயரிய கவுரவம் அளிக்கப்படுகிறது.
பத்ம விருதுகள் முழுப் பட்டியல்
 
பத்ம விபூஷண்:
 
கே.ஜே.யேசுதாஸ் - இசை - கேரளா
சத்குரு ஜக்கி வாசுதேவ் - ஆன்மிகம் - தமிழகம்
சரத் பவார் - பொது வாழ்க்கை - மகாராஷ்டிரம்
முரளி மனோகர் ஜோஷி - பொது வாழ்க்கை - உத்தரப் பிரதேசம்
உடுப்பி ராமச்சந்திர ராவ் - அறிவியல் / பொறியியல் - கர்நாடகம்
சுந்தர் லால் பாட்வா (மறைவு)- பொது வாழ்க்கை - மத்தியப் பிரதேசம்
பி.ஏ.சங்மா (மறைவு) - பொது வாழ்க்கை - மேகாலயா
 
பத்ம பூஷன்:
 
விஷ்வா மோகன் பட் - கலை / இசை - ராஜஸ்தான்
பேராசிரியர் தேவி பிரசாத் திவிவேதி - இலக்கியம் / கல்வி - உத்தரப் பிரதேசம்
தெஹாம்தன் உத்வாடியா - மருத்துவம் - மகாராஷ்டிரா
ரத்னா சுந்தர் மகராஜ் - ஆன்மிகம் - குஜராத்
நிரஞ்சனா நந்தா சரஸ்வதி - யோகா - பிஹார்
ஹெச்.ஆர்.ஹெச். பிரின்சஸ் மஹா சக்ரி ஸ்ரீநிதோன் (வெளிநாடு) - இலக்கியம் / கல்வி - தாய்லாந்து
'சோ' ராமசாமி (மறைவு) - கல்வி / இலக்கியம் / இதழியல் - தமிழகம்
 
பத்மஸ்ரீ:
 
வசந்தி பிஷ்த் - கலை / இசை - உத்ராகண்ட்
செம்மஞ்சேரி குஞ்சிராமன் நாயர் - கலை / நடனம் - கேரளா
அருணா மஹோந்தி - கலை / நடனம் - ஒடிசா
பாரதி விஷ்ணுவர்தன் - கலை / சினிமா - கர்நாடகா
சாது மெஹர் - கலை / சினிமா - ஒடிசா
டி.கே.மூர்த்தி - கலை / இசை - தமிழகம்
லைஷ்ராம் வீரேந்திரகுமார் சிங் - கலை / இசை - மணிப்பூர்
கிருஷ்ண ராம் சவுத்ரி - கலை / இசை - உத்தரப் பிரதேசம்
போவா தேவி - கலை / ஓவியம் - பிஹார்
திலக் கீதாய் - கலை / ஓவியம் - ராஜஸ்தான்
அக்கே யாத்கிரி ராவ் - கலை / சிற்பம் - தெலங்கானா
ஜிதேந்திர ஹரிபால் - கலை / இசை - ஒடிசா
கைஷால் கேர் - கலை / இசை - மகாராஷ்டிரம்
பரஸல்லா பி பொன்னம்மாள் - கலை / இசை - கேரளா
சுக்ரி பொம்மகவுடா - கலை / இசை - கர்நாடகா
முகுந்த் நாயக் - கலை / இசை - ஜார்கண்ட்
புருஷோத்தமன் உபாத்யாயே - கலை / இசை - குஜராத்
அனுராதா பாத்வால் - கலை / இசை - மகாராஷ்டிரா
வாரெப்பா நபா நில் - பொது சேவை - தெலங்கானா
டி.கே.விஸ்வநாதன் - பொது சேவை - ஹரியானா
கன்வால் சிபல் - பொது சேவை - டெல்லி
பிர்கா பதாதூர் லிம்பூ முரிங்லா - இலக்கியம் / கல்வி - சிக்கிம்
ஏலி அகமது - இலக்கியம் / கல்வி - அஸ்ஸாம்
நரேந்திர கோலி - இலக்கியம் / கல்வி - டெல்லி
ஜி.வெங்கட சுப்பையா - இலக்கியம் / கல்வி - கர்நாடகா
அக்கிதம் அச்சுதன் நம்பூதரி - இலக்கியம் / கல்வி - கேரளா
காசிநாத் பண்டிதா - இலக்கியம் / கல்வி - ஜம்மு காஷ்மீர்
சாமு கிருஷ்ண சாஸ்திரி - இலக்கியம் / கல்வி - டெல்லி
ஹரிஹர் க்ரிபாலு திரிபாதி - இலக்கியம் / கல்வி - உத்தரப் பிரதேசம்
மைக்கேல் டனினோ - இலக்கியம் / கல்வி - தமிழகம்
பூனம் சூரி - இலக்கியம் / கல்வி - டெல்லி
வி.ஜி. படேல் - இலக்கியம் / கல்வி - குஜராத்
கோடேஸ்வரம்மா - இலக்கியம் / கல்வி - ஆந்திரா
பல்பீர் தத் - இலக்கியம் / கல்வி / இதழியல் - ஜார்கண்ட்
பாவனா சோமையா - இலக்கியம் / கல்வி / இதழியல் - மகாராஷ்டிரா
விஷ்ணு பாண்டியா - இலக்கியம் / கல்வி / இதழியல் - குஜராத்
சுப்ரதோ தாஸ் - மருத்துவம் - குஜராத்
பக்தி யாதவ் - மருத்துவம் - மத்தியப் பிரதேசம்
முகமது அப்துல் வஹீத் - மருத்துவம் - தெலங்கானா
மதன் மாதவ் கோத்போலே - மருத்துவம் - உத்தரப் பிரதேசம்
தேவேந்திர தயாபாய் படேல் - மருத்துவம் - குஜராத்
ஹரிகிருஷ்ணன் சிங் - மருத்துவம் - சண்டிகர்
முகுந்த் மின்ஸ் - மருத்துவம் - சண்டிகர்
அருண் குமார் சர்மா - தொல்லியல் - சண்டிகர்
சஞ்சீவ் கபூர் - சமையல் நிபுணர் - மகாராஷ்டிரா
மீனாட்சி அம்மா - களரி - கேரளா
ஜெனாபாய் தர்காபாய் படேல் - வேளாண்மை - குஜராத்
சந்திரகாந்த் பிதாவா - அறிவியல் / பொறியியல் - தெலங்கானா
அஜோய் குமார் ராய் - அறிவியல் / பொறியியல் - மேற்கு வங்கம்
சிந்தாகினி மெல்லேஷம் - அறிவியல் / பொறியியல் - ஆந்திரா
ஜிதேந்திர நாத் கோஸ்வாமி - அறிவியல் / பொறியியல் - அஸ்ஸாம்
தரிபள்ளி ராமையா - சமூக சேவை - தெலங்கானா
கிர்ஷி பரத்வாஜ் - சமூக சேவை - கர்நாடகா
காரிமுக் ஹக் - சமூக சேவை - மேற்கு வங்கம்
பிபின் கனத்ரா - சமூக சேவை - மேற்கு வங்கம்
நிவேதிதா ரகுநாத் பீடே - சமூக சேவை - தமிழகம்
அப்பாசாஹேப் தர்மாதிகரி - சமூக சேவை - மகாராஷ்டிரா
பல்பீர் சிங் சீசேவால் - சமூக சேவை - பஞ்சாப்
விராட் கோலி - விளையாட்டு / கிரிக்கெட் - டெல்லி
சேகர் நாயக் - விளையாட்டு / கிரிக்கெட் - கர்நாடகா
விகாஸா கவுடா - விளையாட்டு / வட்டு எறிதல் - கர்நாடகா
தீபா மாலிக் - விளையாட்டு / தடகளம் - ஹரியானா
மாரியப்பன் தங்கவேலு - விளையாட்டு / தடகளம் - தமிழகம்
தீபா கர்மாகர் - விளையாட்டு / ஜிம்னாஸ்டிக் - திரிபுரா
பிஆர் ஸ்ரீஜேஷ் - விளையாட்டு / ஹாக்கி - கேரளா
சாக்ஷி மாலிக் - விளையாட்டு - மல்யுத்தம் - ஹரியானா
மோகன் ரெட்டி வெங்கட்ராம போதனபு - வர்த்தகம் / தொழில் - தெலங்கானா
இம்ரான் கான் (என்ஆர்ஐ/பிஐஓ) - கலை / இசை - அமெரிக்கா
ஆனந்த் அகர்வால் (என்ஆர்ஐ/பிஐஓ) - இலக்கியம் / கல்வி - அமெரிக்கா
எச்.ஆர்.ஷா (என்ஆர்ஐ/பிஐஓ) - இலக்கியம் / கல்வி / இதழியல் - அமெரிக்கா
சுனிதி சாலமன் (மறைவு) - மருத்துவம் - தமிழகம்
அசோக் குமார் பட்டாச்சார்யா (மறைவு) - தொல்லியல் - மேற்கு வங்கம்
டாக்டர் மாபுஸ்கர் (மறைவு) - சமூக சேவை - மகாராஷ்டிரா
அனுராதா கொய்ராலா (மறைவு) (வெளிநாட்டினர்) - சமூக சேவை - நேபாளம்.

குடியரசுதின விழாவை முன்னிட்டு டில்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி மரியாதை!

புதுடில்லி: குடியரசுதின விழாவை முன்னிட்டு டில்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி மரியாதை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார். ராணுவ வீரர்களின் பாரம்பரிய இசை முழங்கப்பட்டது. ராஜ்பாத்தில் நடக்கும் குடியரசுதின விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
 நாட்டின் 68 வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் நாட்டு மக்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் வீதியால் நடந்து செல்ல முடியவில்லை: ஹிருணிகா!

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும்,இதனால் வீதியில் நடந்து செல்ல முடியவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய ஹிருணிகா சமகால அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து விமர்சித்தார்.
 
மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவர்கள் என்ற வகையில் எம்மால் பதிலளிக்க முடியவில்லை. முன்னைய ஆட்சியை ஒழிக்கவும் புதிய ஆட்சியை ஏற்படுத்த முயற்சி எடுத்த பலர் இங்கிருக்கின்றார்கள். ஒருவேளை முன்னாள் ஜனாதிபதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவர்களுக்கு என்ன நடக்குமென எம்மால் கூற முடியாது. அந்தளவிற்கு நாம் முன்னைய அரசாங்கத்திற்கு எதிராக போராடினோம்
.
லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்நெலிகொட ஆகியோரை முன்னிறுத்தியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. நான் எந்தவொரு கட்சியையும் சார்ந்தவள் அல்ல ஆகவே தைரியமாக எதனையும் கூற முடியும். எங்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கததிற்கு காணப்படுகின்றது. நாம் இல்லையென்றால் இந்த அரசாங்கம் இல்லை. சிவில் சமூகத்தினர் இல்லாவிடின் பிரதமர் பதவியோ, ஜனாதிபதி பதவியோ அல்லது அமைச்சரவையோ இன்று இல்லை. 10 வருட ஏகாதிபத்திய ஆட்சி நடத்திய மஹிந்தவை தோற்கடிக்க முடியுமாயின் நாம் ஏற்படுத்திய ஆட்சியில் எக்நெலி கொடவின் மனைவி போன்றவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கவும் எங்களாலேயே முடியும் என்றார்.