Saturday, April 28, 2012

கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி முஸ்லிம் பிரநிதிகளுடன் சந்திப்பு!

Saturday, April, 28, 2012
இலங்கை::தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தை ஊடகங்கள்தான் திரிபு படுத்தியுள்ளன என கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர்ஜெனரல் லால் பெரோ தெரிவித்தார்.
நேற்று மாலை காத்தான்குடிப் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின்அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை மாநாட்டு மண்டபத்தில் முஸ்லிம் பிரநிதிகளுடனான சந்திப்பில்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்

குறித்த பள்ளிவாசலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதே தவிர, பள்ளிவாசல்உடைக்கப்படவில்லை. பள்ளிவாசல் உடைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் ஊடகங்களால்திரிவுபடுத்தப்பட்டதேயாகும். அவ்வாறு சம்பவம் இடம்பெற்றதாக நீங்கள் கருதினால் உங்கள்அனைவரையும் தம்புள்ளைக்கு கூட்டிச் சென்று குறித்த பள்ளிவாசலை காட்டுவதற்கு தான் தயாராகவுள்ளேன் எனவும் முஸ்லிம்களாகிய நீங்கள் அந்தப் பள்ளியில் தொழுகைகளை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு சில பௌத்த மத குருக்களின் நடவடிக்கைக்கு முழு பௌத்த சமூகமும் ஆதரவுதெரிவிக்கவில்லை. இதை வண்மையபகக் கண்டிக்கின்றோம். ஏனெனில் தம்புள்ள பள்ளிவாயல்சம்பவமானது இனங்களுக்கிடையில் முரண்பாட்டையும் விரிசலையம் ஏற்படுத்தச் செய்யும் நடவடிக்கையாகும்.

இச்சம்பவமானது சிறு இனவாத குழுக்களுக்களின் செயற்பாடே தவிர சிங்கள சமூகம் இதை எதிர்க்கின்றது.

முஸ்லிம்கள் அமைதியைக் கடைப்பிடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த முஸ்லிம்களும் பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகளும் தான் ஜெகீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது இலங்கைக்கு கைகொடுத்தார்கள் என்பதை தெரிவித்துகொள்வதோடு அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

நாட்டில் 30வருட கால புலி பயங்கரவாத யுத்தத்திற்குப் பின்னர் சமாதானமாக நிம்மதியாக இன ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இன்றைய சூழ் நிலையை குழப்புவதற்காக உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் பல கோணங்களில் பல சதி முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.

ஒரு கால கட்டத்தில் முஸ்லிம்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டார்கள். இது போன்ற நிலைமைகள் மீண்டும் உருவாகக் கூடாது.

எமது நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பதற்காகவும் , அதிமேதகு ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸவினால் எமது நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியை தடைசெய்வதற்காகவும் எல்.டி.டி.ஈ. விடுதலைப் புலி அபிமானிகளால் பல விதமாக தடைகள் போடப்பட்டு பல விதமான தொந்தரவுகளும் தரப்பட்டு வந்தன.

எல்.டீ.டீ.யினரால் பல அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அது போன்ற நிலைமைகள் இனி ஒரு போதும் நடைபெறக் கூடாது.

எமது பாதுகாப்புக் கடமைகளை செய்வதற்கு முஸ்லிம்களாகிய நீங்கள்அமைதிகாத்து பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஏனெனில் நிரந்தர சமாதானம்தொடர்ந்து இருப்பதற்கும் அதனை ஸ்தீரப்படுத்துவதற்கும் முஸ்லிம்களின் ஒத்துழைப்புஅவசியமாகும்.

இந்த நாட்டிலே தமிழ் சிங்கள பௌத்த கிறிஸ்தவ சகலருக்கும் நமமான உரிமை வழங்கப்படுகின்றது.

இந்த நாடு இறைவனின் அருட்கொடைகள் நிறைந்த ஒரு நாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓவ்வொரு சமயத்திலும் சமயத்திற்கு தூரமானவர்கள் இருக்கின்றனர். இவர்கள் போதைப் பொருட்களை உபயோகிப்பதுடன் கட்டுக்கடங்காதசில நடவகெ;கைகளையும் செய்து கொண்டு இருப்பார்கள்.

இவர்கள் சமயக் கட்டமைப்புக்குள்கொண்டு வரப்பட வேண்டும். அது ஒவ்வொரு சமயத்திலுமுள்ள சமூகத்தவர்களின் கடமையாகும்.

ஆகவே இந்த விடயத்தில்முஸ்லிம்களாகிய நாம் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடித்து இறைவனின் ஆசீர்வாதத்தைப்பெற வேண்டுமென கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர்ஜெனரல் லால் பெரோ தெரிவித்தார்.

இதன் போது முஸ்லிம் பிரமுகர்கள் பலரும் பல தரப்பட்ட கேள்விகளை கட்டளைத் தளபதியிடம் கேட்டனர்.

ஏலவே முஸ்லிம்களின் அநுராதபுரம் தர்ஹா உடைப்பு விவகாரத்தில் அரசாங்கம் உரியநடவடிக்கை எடுக்க வில்லை.

தம்புள்ள பிரச்சினையை இனவாதத்தை தூண்டும் செயலாக சித்தரித்து வருபவது ரண்கிரி வானொலி அலைவரிசையே ஏன் இதைஅரசாங்கம் இது வரைக்கும் கண்டிக்கவில்லை.

தம்புள்ள பள்ளிவாயல் சம்பவம் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஒன்றாகும். இதுவரைஉரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பன போன்ற கேள்விகளை இதன் போது கேட்டதுடன் தம்புள்ளசம்பவம் தொடர்பில் தமது விசனங்களையும் கவலைகளையும் தெரிவித்தனர்.

காத்தான்குடிப் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் கூட்டத்தில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதி நிதிகள் உலமா சபை பிரதி நிதிகள் மட்டக்களப்பு கல்லடி234வது படைப்பிரிவின் கட்டளை தளபதி கேனல் திலகரட்ண’கோயில்குளம் இராணுவ முகாமின் கட்டளைதளபதி ராஜபக்ஷ இராணுவ அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தில் 34 சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் அடங்கலாக 62 சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன!



Saturday, April, 28, 2012
இலங்கை::யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தில் 34 சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் அடங்கலாக 62 சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன என யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக சிறுவர்கள் மீது துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும் அது குறைந்தபாடாக இல்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதன் உச்சக் கட்டமாக சாவகச்சேரியைச் சேர்ந்த 17 வயது இளைஞன், 14 வயதான தனது சொந்த தங்கையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். குறித்த சிறுமி கர்ப்பமாகியதன் பின்னரே பெற்றோருக்குக் கூட தெரியவந்தது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 62 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி மாதம் 12 சம்பவங்களும் பெப்ரவரி மாதம் 21 சம்பவங்களும் மார்ச் மாதம் 2 சம்பவங்களும் ஏப்ரல் மாதம் இதுவரையில் 27 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன என்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பதிவுகள் உள்ளன.

இதில் 34 சம்பவங்கள் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை தூதரகம் முற்றுகை மமக போராட்டத்தில் மதிமுக பங்கேற்பு : (புலி ஆதரவு கோமாளி) வைகோ அறிவிப்பு!

Saturday, April, 28, 2012
சென்னை::மதிமுக பொதுச் செயலாளர் (புலி ஆதரவு கோமாளி) வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் தம்புலா என்ற இடத்தில் உள்ள மசூதியை கடந்த 20,ம் தேதி 2 ஆயிரத்துக்கும் அதிகமான புத்த பிட்சுகள் முற்றுகையிட்டுள்ளனர். கடப்பாரை, சம்மட்டிகளால் மசூதியை உடைத்து நாசம் செய்துள்ளனர்.இதை கண்டித்து வரும் 30,ம் தேதி மாலை 4 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனித நேய மக்கள் கட்சி நடத்த உள்ளது. இந்தப் போராட்டத்தில் மதிமுக பங்கேற்கும். பிற்பகல் 3 மணிக்கு மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா அருகில் இருந்து புறப்பட்டு செல்லும் அறப்போராட்ட குழுவில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தென்சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜீவன், அமைப்பு செயலாளர் சீமா பஷீர் உள்ளிட்ட மதிமுகவினர் பெருந்திரளாக பங்கேற்பர்.

3 சினிமா படத்தில் வரும் கொல வெறிடி பாடலுக்கு மலேசிய பிரதமரும் ரசிகர்!!!:-கவர்ச்சி காட்டுவதை தவிர்க்க முடியாது : காஜல் அகர்வால் பேட்டி!!!

Saturday, April, 28, 2012
கோலாலம்பூர்::நடிகர் தனுஷ் நடித்த 3 சினிமாவில் வரும் கொல வெறிடி பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்......watch-
http://poonththalir-kollywood.blogspot.com
கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!,,,கிரிக்கெட் வீரருடன் ஹரி ப்ரியா குத்தாட்டம்!!!,,,வித்யா வேடத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டி ஆர்வம்!!!,,, கௌதம் படம் ட்ராப்!!!,,,கவர்ச்சி காட்டுவதை தவிர்க்க முடியாது : காஜல் அகர்வால் பேட்டி!!!,,, கவர்ச்சி நடிகைக்கு முக்கியத்துவம் தருவதா? இயக்குனர் மீது 2 ஹீரோயின்கள் பாய்ச்சல்!!!,,,ரகசியத்தை உடைத்த நடிகை : சத்தம் போட்ட இயக்குனர்!!!,,,மே 1 கமலின் காஸ்ட்லி படமான விஸ்வரூபம் புரமோ!!!?,,, ஆதியின் உயரத்தை ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினி: கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி: நடிகர் ஆதி பேட்டி!!!,,, த்ரிஷா படத்துக்கு கர்நாடகாவில் சிக்கல்!!!,,,ரூ.1 கோடி சம்பளம் கேட்டேனா? தமன்னா பதில்!!!,,,எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களே நிஜ ஹீரோக்கள் -அஜீத்!!!,,,என் வாழ்க்கை கதையை நானே டைரக்டு செய்கிறேன்: நடிகை சோனா பேட்டி!!!,,, படு கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்... தப்பான நினைப்போட என்கிட்ட வராதீங்க - அஜீத் ஹீரோயின்!!!,,,பட வாய்ப்புகளை இழந்தது ஏன்? வடிவேலு விளக்கம்!!!,,,41 வயதில் காதல் காட்சியா? கிண்டல் செய்யாதீர்கள் : அஜீத் மனம் திறந்த பேட்டி!!!,,, ஜெயம் ரவிக்கு ஜோடி நயன்தாரா அல்ல... அமலா பால்!!!,,,கார்த்திகாவா? யார் அது? - ஹன்ஸிகா ஆவேசம்!!!,,,

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இங்கிலாந்து முழு ஆதரவு!

Saturday, April, 28, 2012
லண்டன்::ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த கவுன்சிலை விரிவுப்படுத்த வேண்டும். அதில் மேலும் சில நாடுகளை சேர்க்க வேண்டும் என்று இந்தியா, ஜப்பான் உள்பட பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க பல நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில், சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் நேற்று உரை நிகழ்த்தினார்.

இதுகுறித்து லண்டனில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாதுகாப்பு கவுன்சில் உள்பட ஐ.நா. சபையை விரிவுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளை கட்டாயம் சேர்க்க வேண்டும். இதற்கு இங்கிலாந்து முழு ஆதரவு அளிக்கும். உலகின் பொருளாதாரம் உள்பட பல விஷயங்களில் பல நாடுகள் வலிமை உள்ள நாடுகளாக உருவெடுத்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் சர்வதேச வெளியுறவுத் துறை கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரைவில் விரிவுப்படுத்த வேண்டும் என்று வில்லியம் வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க திரைப்பட விழாவில் இந்திய பெண்ணுக்கு விருது!!!

Saturday, April, 28, 2012
நியுயார்க்::அமெரிக்காவின் நியுயார்க் நகரில் ஆண்டுதோறும் ட்ரைபேகா திரைபட விழா நடக்கிறது. இந்தாண்டு விழாவில், கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் நிஷா பகுஜா உருவாக்கிய ‘தி வேர்ல்டு பிபோர் ஹெர் என்ற ஆவண படம் தேர்வு செய்யப்பட்டது. இந்திய பெண்கள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களை படத்தில் எடுத்து காட்டியிருந்தார் நிஷா.
மொத்தம் 46 நாடுகளை சேர்ந்த 89 ஆவண படங்களில் இருந்து அவரது படம் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருதோடு நிஷாவுக்கு 25 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்பட்டது. இது அவருக்கு 3வது படமாகும். வைர வியாபாரம் பற்றிய அவரது முதல் படம் ‘டயமன்ட் ரோடு, கனடாவின் ஜெமினி விருதை பெற்றது. ‘பாலிவுட் பவுண்ட் என்ற அவரது 2வது படம் உலகமெங்கும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது