Wednesday, June 5, 2019

கிழக்கு மாகாண ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்!

கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று(05) பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த ஹிஸ்புல்லா பதவி விலகியதை அடுத்து அந்தப் பதவிக்கு கத்தோலிக்கர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிற்கட்சியின் தலைவர் ஏ.எஸ்.பி லியனகே நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.மேல் மாகாணத்திற்கு ஏ.ஜே.எம். முஸாம்மில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்திற்கு கத்தோலிக்கரான ஏ.எஸ்.பி. லியனகே நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தெரியவருகிறது.
 
ஷான் விஜயலால் டி சில்வா தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment