Thursday, June 6, 2019

2வது முறையாக பதவியேற்ற பின் முதல் பயணம்:பிரதமர் மோடி: முதலில் மாலத்தீவு; வரும் வழியில் இலங்கை!

நாட்டின் பிரதமராகத் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நரேந்திர மோடி, வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் மாலத்தீவு மற்றும் இலங்கை நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பாஜ கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் ெபரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுள்ள சூழலில், நாடாளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம், வரும் 17ம் தேதி கூடுகிறது. இந்நிலையில், பிரதமரின் பதவியேற்பு
விழாவுக்கு வந்திருந்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது
சோலிஹ்ஹும் ஆகிேயார் தங்கள் நாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

அதையடுத்து வரும் 8ம் தேதி மாலத்தீவு செல்லும் மோடி, அங்கு, இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாடு திரும்பும் வழியில் 9ம் தேதி இலங்கைக்குச் செல்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர், மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுதான். மாலத்தீவை தொடர்ந்து இலங்கைக்கு செல்லும் மோடி, அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேச உள்ளார்.

அண்டை நாடுகளுடனான கொள்கை, வர்த்தகம், ராணுவ தகவல் பகிர்வு, தொழில்நுட்பம் ஆகியன குறித்து பேசப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment