Tuesday, September 15, 2015

இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே இந்திய பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு!

Tuesday, September 15, 2015
புதுடெல்லி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இருவரும் தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கிறார்கள். இலங்கை பாராளுமன்றத்திற்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ரணில் விக்ரம சிங்கே தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ரணில் 4வது முறையாக இலங்கையின் பிரதமராக பதவியேற்றார்.
 
அவரது வெற்றியை பாராட்டி இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் இந்தியாவிற்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். இதனை இலங்கை பிரதமர்  ரணில் விக்ரம சிங்கே ஏற்றுக் கொண்டு இந்திய பயணத்தை மேற்கொண்டுள்ளார் . அவர் இன்று இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இந்தியாவில் அவர் 3நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
 
இலங்கையின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரம சிங்கே நேற்று டெல்லிக்கு வந்தார். அவருடன் இலங்கை வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் மங்கள சமர வீர வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம பிரதமரின் செயலாளர் சமன் ஏக் நாயக்க மற்றும் உயர் அதிகாரிகள் வந்துள்ளனர். பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேஇருநாடுகள் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுகிறார். மோடி-ரணில் சந்திப்பில் தமிழக மீனவர்கள் பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.
 
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யப்படுகிறார்கள். தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் மீன் பிடி வலைகள் ஆகியவற்றை இலங்கை அரசு பறிமுதல் செய்கிறது. இன்று மோடி-ரணில் சந்திப்பு நடந்த பின்னர் மதியம் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கிறார்கள். பிரதமர் மோடியைத்தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் 5மத்திய அமைச்சர்களை இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே சந்திக்கிறார்.
 
நாளை (புதன்) இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே இந்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசுகிறார்.பின்னர் அவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசுகிறார். ரணிலுக்கு ஜனாதிபதி விருந்து அளிக்கிறார் அதன் பிறகு மதியம் 1.30மணியளவில் அவர் இலங்கை புறப்பட்டு செல்கிறார்.

No comments:

Post a Comment