Tuesday, September 15, 2015

இந்தியாவை நம்ப முடியாது- அத்துரலிய தேரர்!

Tuesday, September 15, 2015
இந்தியாவுடன் இதுவரையில் செய்து கொள்ளப்பட்ட எந்தவொரு உடன்படிக்கையினாலும் இலங்கைக்கு எந்தவொரு நன்மையும் ஏற்படவில்லையெனவும், புதிய அரசாங்கம் எந்தவொரு உடன்படிக்கை செய்து கொள்வதாயினும், அதனை நாட்டுக்கு தெளிவுபடுத்தியதன் பின்னரே இடம்பெற வேண்டும் எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் உப தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
 
எந்வொரு உடன்படிக்கை செய்வதாயினும், அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படல் வேண்டும். இரகசியமாக எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திட முடியாது. கடந்த கால வரலாற்றைப் பார்க்கும் போது இந்தியாவின் மீது எந்தவகையிலும் நம்பிக்கை வைக்க முடியாது எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடன்படிக்கையொன்று செய்வதாக இருந்தால் அது நாட்டுக்கு நன்மை பயக்க வேண்டும். அவ்வாறில்லாத எந்தவொரு உடன்படிக்கையாயினும் அதனை எதிர்க்கப் போவதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment