Tuesday, September 15, 2015

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையிலேயே நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Tuesday, September 15, 2015
உத்தியோகபூர்வ விஜயம்  மேற்கொண்டு இந்திய சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

இதன்போது, இரு தரப்புக்கு இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இன்றைய தினம் இந்திய எதிர்கட்சி தலைவரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சந்திக்க உள்ளார்.

நேற்றைய தினம் டெல்கிச் சென்ற இலங்கை பிரதமரை இந்திய மத்திய வர்த்தக வாணிப அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வரவேற்றார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 16 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் இந்தியா சென்றுள்ள நிலையில், அந்த குழுவினர் ஜனாதிபதி பிரணாப் முக்கர்ஜி மற்றும் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உட்பட பல தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நான்கு கைச்சாத்திடப்பட்டுள்ளன.
 
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையிலேயே இந்த  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

சார்க் வலயத்தில் செய்மதி பரிமாற்றும் வேலைத்திட்டம், வவுனியா மாவட்ட வைத்தியசாலையை புனரமைக்கும் வேலைத்திட்டம்,
 
 சிறிய அபிவிருத்திக்கு உதவி வழங்குதல், இந்தியா
வில் 17 மாநிலங்களில் முன்னெடுக்கப்படும் அவசர சிகிச்சை சேவை அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ளல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
 
மேலும் முன்னதாக அவர் டெல்லியில் இந்திய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது, என தமிழக ஊடகமான தினமணி குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment