Monday, September 14, 2015

விக்னேஸ்வரனின் சர்வதேச விசாரணைக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கவில்லை : வாசுதேவ!

Monday, September 14, 2015
உள்­ளக விசா­ரணை நடத்­து­வ­தற்கே தமிழ் மக்கள் சம்­பந்­த­னுக்கு ஆத­ரவு வழங்­கி­னார்­களே தவிர மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட விக்­கி­னேஸ்­வ­ரனின் சர்­வ­தேச விசா­ர­ணைக்­கல்ல என முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.எமது ஆட்­சியில் நாம் அமெ­ரிக்­கா­வுக்கும் ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­க­ளுக்கும் அடி­ப­ணி­ய­வில்லை. அவர்­களின் பொரு­ளா­தாரக் கொள்­கை­களை நாம் பின்­பற்­ற­வில்லை.
 
எனவே தான் அமெ­ரிக்கா எமது நாட்­டுக்கு எதி­ராக ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் பிரே­ர­ணை­களை முன்­வைத்­தது. ஆனால் இன்று அமெ­ரிக்­கா­வுக்கு அடி­ப­ணிந்து அதன் பொரு­ளா­தாரக் கொள்­கையை முன்­னெ­டுக்கும் ஆட்­சியே உள்­ளது. எனவே தான் அமெ­ரிக்கா கடினப் போக்கை தளர்த்­தி­யுள்­ளது. அதே­வேளை தமிழ் மக்­களின் ஏகப்­பி­ர­தி­நி­தி­க­ளாக சம்­பந்தன், சுமந்­திரன் ஆகியோர் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.
 
அத்­தோடு உள்­ளக விசா­ர­ணைக்கும் தமிழ் மக்கள் ஆத­ரவு வழங்­கி­யுள்­ளனர். எனவே அவர்­க­ளது கோட்­பாட்­டுக்­க­மைய உள்­ளக விசா­ர­ணையை ஆத­ரிக்­கின்­றனர். இதனை வர­வேற்­கின்றோம். ஆனால் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட விக்­கி­னேஸ்­வ­ரனும் அவ­ரது கூட்­டமும் சர்வதேச விசாரணையை கோருகின்றன. இதனை நாம் எதிர்க்கின்றோம். தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் நிலைப்பாட்டையே ஆதரிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment