Monday, September 14, 2015

ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 30வது அமர்வு இன்று சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் ஆரம்பம்!

Monday, September 14, 2015
ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 30வது அமர்வு இன்று சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் ஆரம்பமாகின்றது.

இந்த அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பர்ணான்டோ உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜெனீவா சென்றுள்ளனர்.

மனிதவுரிமைகள் மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேனை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, இலங்கை தொடர்பாக இந்தமுறை மனிதவுரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை மற்றும் நாட்டில் மனிதவுரிமைகளை மேம்டுத்தலுக்கான முன்னெடுப்புகள் பற்றி ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment