Monday, September 7, 2015

ரனில் விக்கிரமசிங்கே வரும் 14-ந்தேதி இந்தியா வருகை!

Monday, September 07, 2015
வரும் 14-ந்தேதி இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே இந்தியாவிற்கு வர உள்ளதாக இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த மாதம் 17–ந்தேதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் ரனில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அதிக இடங்களில் வெ

இலங்கை பிரதமராக ரனில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டு முதன் முறையாக வரும் 14ந்தேதி இந்தியா வர உள்ளார். இந்தியா வரும் அவர் டெல்லியில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் விவேகானந்தா அறக்கட்டளை சார்பில் நடைபெற உள்ள புத்த மத கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளார்.

புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசும் ரனில் விக்கிரமசிங்கே இலங்கை தலைமன்னார், ராமேஸ்வரம் இடையே மேம்பாலம் அமைப்பது பற்றியும், விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் பற்றியும் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரதமராக பதவியேற்றுக் கொண்ட பின்பு ரனில் விக்கிரமசிங்கே மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இலங்கை பிரதமராக ரனில் விக்கிரமசிங்கே மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment