Monday, September 7, 2015

சம்பந்தனை எதிர்க் கட்சியாக நியமித்தமை, ஓமந்தை சோதனைச் சாவடியை நீக்கியமமை :தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கூட்டணிப் பங்காளியான தேசிய சுதந்திர முன்னணி, தேசிய பாதுகாப்பு குறித்து தனது கவலையை நேற்று வெளிப்படுத்தியிருந்தது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை எதிர்க் கட்சியாக நியமித்தமை, ஓமந்தை சோதனைச் சாவடியை நீக்கியமமை மற்றும் புலிகள் உறுப்பினர்கள் பலரை விடுதலை செய்தமை போன்ற செயற்பாடுகள் அனைத்தும் தேசிய பாதுகாப்பக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர், மொஹமட் முஸ்ம்மில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலின் போது தனக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய பதவிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

No comments:

Post a Comment