Friday, August 14, 2015

எமக்கு திருடர்கள் என்று தொடர்ந்து குற்றஞ்சுமத்தினாலும் ஆளும் தரப்பிலே அநேக திருடர்கள் இருக்கிறார்கள்.

Friday, August 14, 2015
எமக்கு திருடர்கள் என்று தொடர்ந்து குற்றஞ்சுமத்தினாலும் ஆளும் தரப்பிலே அநேக திருடர்கள் இருக்கிறார்கள். எமது ஆட்சியில் நிதி மோசடி விசாரணை பிரிவு நவீனமயப் படுத்தி இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ம.சு.மு. செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த தெரி வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய் திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அவர்,

மத்திய வங்கி ஆளுநருக்கும் மருமகனுக் கும் நீதிமன்றம் அழைப்பாணை விடுத் துள்ளது. தவறு இருப்பதாலே நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருக்கிறது. நாட் டின் பொருளாதாரத்தை நாசப்படுத்தவே பிரபாகரன் மத்திய வங்கி மீது தாக்குதல் நடத்தினார். இரண்டாவது தாக்குதலாக வெளிநாட்டு பிரஜை ஒருவர் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டு பொருளாதாரம் நாசமாக்கப்படுகிறது.

ஒரு பில்லியன் திறைசேரி முறி விநி யோகிக்க தேவையான போது 10 பில்லியன் திறைசேரி முறி விநி யோகிக்கப்பட்டது கிடையாது. மத்திய வங்கி ஆளுநரின் பணிப் பிலேயே 10 பில்லியன் விநி யோகிக்கப்பட்டது. வெளிநாட்டுப் பிரஜை என்பதால் அவர் மத்திய வங்கி ஆளுநராக சத்தியப்பிர மாணம் செய்யவில்லை. எமது தரப்பிலிருந்து மறுபக்கம் சென்ற வர்கள் சிங்கப்பூரில் 2 நாள் இருந்துவிட்டு வந்துள்ளனர். இவர்கள் பணம் எடுத் துக்கொண்டு சென்றதாக ஊடகங்களில் செய்தி பிரசுரமானது.

ஐ.தே.க. வேட்பாளர்களுடனே பாதாள உலகத்தினர் உள்ளனர். பாதாள உலகத்தி னருடனான மோதலினாலே புளுமெண்ட லில் இருவர் கொல்லப்பட்டதாக சி.ஐ.டி. நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

புலிகளுக்கு பணம் கொடுத்ததாக சம்பிக ரணவக்க கூறிவருகிறார். பணம் கொடுத்தாவது புலிகளை அழித்துள்ளோமே. பிரேமதாஸ பணம் கொடுத்தும் எதுவும் செய்யவில்லை. ராடா நிறுவனத்தினூடாக பணம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்படு கிறது.

அமைச்சரவை அனுமதியுடன் அரச அதிபர்களினூடாகவே வடக்கில் வீடுகள் கட்டப்பட்டன.

No comments:

Post a Comment