Friday, August 14, 2015

(டுவிட்டர்) தனிப்பட்ட உரையாடல்களை (Direct Message) விரிவாக மேற்கொள்வதற்கான புதிய வசதி அறிமும்!

Friday, August 14, 2015
சமூக வலை தளமான சுட்டுரையில் (டுவிட்டர்) தனிப்பட்ட உரையாடல்களை (Direct Message) விரிவாக மேற்கொள்வதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
சுட்டுரைக் கணக்காளர்கள், தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் உரையாடல்களில் இதுவரை 140 எழுத்துகளை மட்டுமே அதிகபட்சமாக பயன்படுத்த முடியும். அது, தற்போது 10,000 எழுத்துகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனிப்பட்ட உரையாடல்களை இனி விரிவாக மேற்கொள்ள முடியும். இந்த வசதியை அறிமுகப்படுத்தப் போவதாக கடந்த ஜூன் மாதமே டுவிட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில், தற்போது அந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ், குஜராத்தி, கன்னடம், மராத்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தனது சேவையை டுவிட்டர் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதேபோல், இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் தனிப்பட்ட உரையாடல் சேவையைப் பயன்படுத்தவதற்கான வசதி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தங்களது வலைதளப் பக்கத்துக்கு அதிக பயன்பாட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் பல்வேறு புதிய வசதிகளை டுவிட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment