Sunday, August 16, 2015

கச்சத்தீவில் இந்திய தேசியக் கொடியேற்ற முயன்றவர்கள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் கைது!

Sunday, August 16, 2015:
ராமேஸ்வரம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு கச்சத்தீவில் இந்திய தேசியக் கொடியை நேற்று ஏற்ற முயன்ற பாரத் மக்கள் கட்சியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாகச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அனைவரையும் கைது செய்தனர். முன்னதாக, கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது என்று கோஷமிட்ட போராட்டக்காரர்கள், மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள பாரதிய ஜனதா கட்சி கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எதிர்வரும் குடியரசுத் தினத்தன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
 
தடையை மீறி இலங்கை கச்சதீவு செல்ல முயன்ற பாரத் மக்கள் கட்சியினர் 39 பேரை, போலீசார் கைது செய்தனர்.இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்கவும். அப்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்களுக்கு பெற்றுத் தரவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி, சுதந்திர தினமான நேற்று கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்ற முயன்ற பாரத் மக்கள் கட்சியினருக்கு போலீசார் தடை
 
விதித்தனர்.தடையை மீறி ராமேஸ்வரம் தேவர் சிலை அருகே ஊர்வலம் செல்ல முயன்ற பாரத் மக்கள் கட்சி நிறுவனர் அண்ணாதுரை உள்ளிட்ட 39 பேரை, ராமேஸ்வரம் டி.எஸ்.பி., முத்துராமலிங்கம், இனஸ்பெக்டர்கள் அசோக்குமார், ரமேஷ்குமார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment