Sunday, August 16, 2015

விஸ்வ வர்ணபாலவை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு அறிவித்துள்ளது!

Sunday, August 16, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளராக விஸ்வ வர்ணபாலவை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு அறிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ள தேர்தல்கள் ஆணையாளர் மறுத்துள்ளார்.
 
கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன் கூட்டமைப்பின் செயலாளர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவை நீக்கிவிட்டு வர்ணபாலவை நியமித்தார்.எனினும் இதனை கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு ஏற்கமறுத்துள்ளது.
 
இதேவேளை,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டமையை ஏற்றுக் கொள்ள தேர்தல்கள் ஆணையாளர் மறுத்துள்ளார்.
 
இந்தக் கடித்தில் சுசில் பிரேமஜயந்தலுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எந்தவொரு அதிகாரங்களையும் நிறைவேற்ற முடியாது என்று துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
 
எனினும் இந்த கடிதத்தை விஸ்வ வர்ணபாலவுக்கு பதிலாக துமிந்த திஸாநாயக்க, தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பினார் என்று கேள்வியும் எழுந்துள்ளது.
 
இதற்கிடையில் இன்று தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்த, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சட்டத்தரணிகள், சுசில் பிரேமஜயந்த செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக தமது ஆட்சேபனையை வெளியிட்டனர்.

No comments:

Post a Comment