Tuesday, August 11, 2015

அன்று சந்திரிக்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை புலிகளுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு சென்றமை தேசிய பாதூகப்பிற்கு அச்சுறுத்தல்: டலஸ் அழகப்பெரும!

Tuesday, August 11, 2015
சந்திரிக்கா காலத்தில் 19 ஆம் திருத்தச்சட்டம் இருந்திருப்பின் 2007 ஆம் ஆண்டிற்குள் தமிழீழ இராச்சியம் உருவாகியிருப்பதனை யாராலும் தடுத்திருக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அன்று ரணில் தலைமையிலான ஆட்சியை சந்திரிக்கா கலைத்தது தமக்குறிய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அன்று சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நாடாளுமன்றத்தைக் கலைக்கும் போது, நடைமுறை அரசாங்கமும், பிரதமரும் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்காமல் பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு சென்றமை தேசிய பாதூகப்பிற்கு அச்சுறுத்தல் என்று கூயிருந்தார். இதனால் நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில் தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக குறிப்பிட்டார்.

இன்று கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தை 2 வருடங்களில் கலைத்ததற்கு நாம் சந்திரிக்கா அம்மையாருக்கு நன்றியைத் தெரிவிக்கவேண்டும். இதனால் அவசர தேர்தலுக்கு இந்த நாடு முகம் கொடுத்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக தெரிவானார். இந்த சந்தர்ப்பமே அவரை 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மாற்றியது. இதனாலேயே அவர் உலகத்தில் மிகப்பயங்கரமான அமைப்பாக கருதப்பட்ட விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டது. அன்று 19வது திருத்தச்சட்டம் இருந்திருக்குமானால், சந்திரிக்காவினால் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்திருக்க முடியாமல் போயிருக்கும். இதற்காக அவர் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் காத்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும்.

அன்று 2007 ஆகஸ்ட் வரையில் விக்ரமசிங்க ஆட்சி இருந்திருக்குமானால், ஐக்கிய நாடுகள் சபையானது 197 வது நாடாக தமிழீழத்தை அங்கீகரித்திருப்பதனை யாராலும் தடுத்திருக்க முடியாது. ஏனெனில் இந்த நாட்டிலும், பயங்கரவாதிகளினால் நிர்வகிக்கப்படும் பகுதி இருக்கின்றது என்பதனை ரணில் விக்கரமசிங்க செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக்கொண்டதுடன், சர்வதேசத்திற்கும் எடுத்துரைத்திருந்தார். இது உலகத்தில் பயங்கரவாதிகளுக்கு அங்கிகாரம் கொடுத்த முதலாவது சந்தர்ப்பமாகும். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதனால் அவை அனைத்தும் தவிடுபொடியானது.” என்றும் கூறினார்.

No comments:

Post a Comment