Tuesday, August 11, 2015

பழிவாங்கல் மற்றும் அடக்குமுறைக்கு காலத்தை வீணடித்த ஐக்கிய தேசிய கட்சி: மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, August 11, 2015
பழிவாங்கல் மற்றும் அடக்குமுறைக்கு காலத்தை வீணடித்த ஐக்கிய தேசிய கட்சி அபிவிருத்திக்காக முயற்சி மேற்கொள்ள காலம் இருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சுமத்தியுள்ளார்.

நேற்று மாலை எஹெலியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஐக்கிய தேசிய கட்சி கொள்கைகளை மறந்து வேட்பாளர்கள் மீது சேறு பூசி அவர்களை அழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இதனால், நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரம் என்பன பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளன.

ஆனால் நாட்டை பொறுப்பேக்கும் போது பல பின்னடைவுகளை நாடு சந்திந்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.,
 
மக்களின் கோரிக்கைக்கு அமையவே 18ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
மூன்றாம் தவணை ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் உத்தேசம் இருக்கவில்லை.
மக்களின் கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு 18ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி தேர்தலில் போட்டியிட்டேன்.
 
நான் ஆரம்பித்த பணிகளை பூர்த்தி செய்யும் வரையில் பதவியில் இருக்குமாறு கோரப்பட்டிருந்தது.
அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜனாதிபதியின் பதவிக் காலம் நிர்ணயம் செய்யப்படக் கூடாது.
 
பிரான்ஸ் மற்றும் அமெரிக்க சட்டங்களை அதேவிதமாக அமுல்படுத்தவோ பின்பற்றவோ வேண்டிய அவசியமில்லை.
 
மூன்றாம் தவணையில் ஆட்சி செய்ய அனுமதிப்பதா இல்லையா என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
மக்களின் தீர்மானத்திற்கு அடிபணிந்தேன்.மக்களின் கடுமையான கோரிக்கைக்கு அமையவே இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பு தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர் காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்..
 
வடக்கு, கிழக்கை புலிகளின் ஈழத்திற்கு வழங்கி புதிய நாடொன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி 60 மாதங்களுக்கு மக்கள் ஆதரவை கோருகின்றதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
கொட்டாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
ரணில் வழங்கிய வாக்குறுதிகளில், புலிகளின் ஈழம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று எனக்கு நம்பிக்கையுள்ளது.
 
இச்சிறந்த தாய் நாட்டை துண்டு துண்டாக பிரிப்பதற்கு யாருக்கும், ஒரு போதும் இடமளிக்க முடியாது.
 
ஒருங்கிணைந்த நாட்டினுள் அனைத்து மதத்தினருக்கும் தங்கள் மதத்தை வழிபாடு செய்வதற்கான சந்தர்ப்பத்தை முன்னணி அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்தி தருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment