Tuesday, August 11, 2015

லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் படைவீரர்கள் நினைவு தினம்!

Tuesday, August 11, 2015
சமகால வரலாற்றின் மிகச்சிறந்த போர் வீரரும் அகால மரணத்திற்குள்ளானவருமான மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்கள் சக இராணுவ அதிகாரிகள், படை வீரர்கள் மற்றும் இலங்கை மக்களால் கடந்த 23 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆகஸ்ட் 8 இலும் பெருமையுடன் நினைவு கூறப்பட்டு வருகின்றார்.
 
மேலும், இவ்வாண்டினது நினைவு நாள் நிகழ்வு வழமை போன்று திருமதி லாலி கொப்பேகடுவ மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அனுராதபுரத்தில் உள்ள தந்திரிமலையிலும் நாட்டின் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
இதன்போது அனுராதபுரம் நகரத்திலுள்ள மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் உருவச்சிலைக்கு பூரண இராணுவ மரியாதை வழங்கப்பட்டதுடன் மலர் வலையங்களும் சாத்தப்பட்டன.

மேலும், லெப்டினன்ட் ஜெனரல் கொப்பேகடுவ அவர்கள் வட பகுதியில் இடம் பெற்ற ஆரம்ப கட்ட புலிகளின் ஈழப் போர்களுக்கெதிராக இலங்கை இராணுவம் பல வெற்றிகளைப் பெற காரண கருத்தாவாக அமைந்த காரணத்தினால் 1992ம் ஆண்டு ஆகஸ்ட் 08ம் திகதி யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் உள்ள அரலி முகாமிற்கு இராணுவச் செயற்பாடு தொடர்பில் சென்றிருந்த வேளை பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
 
மேலும் இவருடன் சென்றிருந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமக, லெப்டினன்ட் கர்னல் எச். ஆர். ஸ்டீபன், லெப்டினன்ட் கர்னல் ஜீ. எச். ஆரியரத்ன, லெப்டினன்ட் கர்னல் வை. என். பலிபன, கொமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கர்னல் நளின் டி அல்விஸ், லெப்டினன்ட் கொமாண்டர் சி.பி. விஜேபுர மற்றும் இராணுவ வீரர்கள் , பிரத்தியேக ஊழியர் டபிள்யூ.ஜே. விக்கிரமசிங்க ஆகியோரும் இத்தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment