Tuesday, August 11, 2015

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் எட்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு!

Tuesday, August 11, 2015
இரத்மலானையிலுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தடவையாக ஏற்பாடு செய்துள்ள வருடாந்த சர்வதேச ஆராய்ச்சி மாநாடு எதிர்வரும் 27 ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
 
புதேசிய அபிவிருத்திக்காக தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்தல்பூ என்ற தொனிப் பொருளில் இரண்டு நாட்கள் இந்த ஆராய்ச்சி மாநாடு நடைபெறவுள்ளதாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) பிரதி உபவேந்தர் மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க தெரிவித்தார்.
 
மேற்படி ஆராய்ச்சி மாநாடு தொடர்பாக ஊடகங்ளுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இன்று (ஆகஸ்ட் 10) இடம்பெற்றது.
 
இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் பதில் பணிப்பாளருமான பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (கல்வியியல்) பிரதி உபவேந்தர் பேராசிரியர் திலக் வீரசூரிய, பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி துஷார வீரவர்தன, 2015ஆம் ஆண்டுக்கான ஆராய்ச்சி மாநாட்டின் தலைவர் கலாநிதி சரிதா குணசேகர ஆகியோர் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் கலாநிதி சரிதா குணசேகர மேலும் விளக்கமளிக்கையில் :-
இந்த ஆராய்ச்சி மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். ஒன்பது விடயங்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளன. இம்முறை 500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி தொடர்பான பத்திரிகைகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் 306 பத்திரிகைகள் மாநாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
 
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த 40 சிறப்பு பேச்சாளர்களும், 400 பேரும் பங்குபற்றவுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், சிங்கபூர், பங்களாதேஷ், மலேசியா, தென்கொரியா, பிலிபைன்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் அவூஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இந்த ஆராய்ச்சி மாநாட்டில் பங்குபற்றவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) பிரதி உபவேந்தர் மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க விளக்கமளிக்கையில் :- குறுகிய காலப்பகுதிக்குள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் துரித வளர்ச்சி கண்டுள்ளன. தற்பொழுது ஒன்பது பீடங்கள் உள்ளன. எதிர் காலத்தில் வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
 
இதேவேளை, மேற்படி சர்வதேச ஆராய்ச்சி மா நாட்டின் பலனாக இந்த பல்கலைக் கழகத்தில் கல்விகற்பதற்காக வருகைத்தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகாசித்து காணப்படுவாதாகவும் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment