Tuesday, August 18, 2015

சஜித்தின் தொகுதியும் மண் கவ்வியது! பொன்சேக்கா சொந்த ஊரிலேயே மண் கவ்வியது!

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவின் சொந்த தொகுதியான, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராமையில் ஐ.தே.க. இம்முறை பின் தள்ளப்பட்டுள்ளது.
இங்கு ஐ.தே.கவுக்கு இம்முறை 48,184 வாக்குகளே கிடைத்துள்ளன.
63,950 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இங்கு முன்னிலை வகிக்கிறது.
 
பீல்ட் மார்ஷல் பொன்சேக்கா சொந்த ஊரிலேயே மண் கவ்வியது!
 
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் சொந்த ஊரான அம்பலங்கொடையில் அவரது கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு வெறும் 1226 வாக்குகளே கிடைத்துள்ளன.
 
இங்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 26,453 வாக்குகளையும், ஐக்கிய தேசிய கட்சி 22, 671 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 5,532 வாக்குகளையும் சுவீகரித்துள்ளன
 

No comments:

Post a Comment