Thursday, August 13, 2015

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை இந்த அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளுமா என்­பதை ரணில் மக்­க­ளுக்கு தெளி­வாக தெரி­விக்க வேண்டும்: சுசில்!

Thursday, August 13, 2015
ஐக்­கிய தேசியக் கட்­சியின் அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்­கான ஆட்சித்திட்­டத்தில் தேசிய அர­சாங்கம் எனும் தெரிவு மட்­டுமே உள்­ளது. அவ்­வா­றாயின் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை இந்த அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளுமா என்­பதை ரணில் தெளி­வாக மக்­க­ளுக்கு தெரி­விக்க வேண்டும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் சுசில் பிரே­ம்ஜ­யந்த தெரி­வித்தார்.
 
ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அனு­ர­கு­மார திஸா­ நா­யக்க ஆகியோர் மூடிமறைத்த வதை முகாம் உண்­மை­களை நாம் தொடர்ந்தும் கிளறிக்­கொண்டே இருப்போம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
 
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. இதில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,
 
ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் தேசிய அர­சாங்கம் என்ற ஒரு நிலைப்­பாட்டில் தான் செயற்­பட்டு வரு­கின்­றனர். அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்­கான ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சித்திட்­டத்தில் தேசிய அர­சாங்கம் எனும் தெரிவு மட்­டுமே உள்­ளது.
 
அவ்­வா­றான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை இந்த அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளுமா என்­பதை ரணில் தெளி­வாக மக்­க­ளுக்கு தெரி­விக்க வேண்டும். பிரி­வி­னை­வாத சக்­தி­களை எவ்­வாறு இணைத்­துக்­கொண்டு நாட்டை முன்­னெ­டுக்­க­வேண்டும் என்­பதை சம்­பிக்க ரண­வக்க, மாது­லு­வாவே சோபித தேரர் ஆகியோர் தெரி­விக்க வேண்டும்.
 
மேலும் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு இரண்டு நாட்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் முக்­கிய உறுப்­பினர் ஒருவர் லண்டன் பய­ண­மா­கி­யுள்ளார். சென்று இரண்டே நாட்­களில் மீண்டும் இலங்­கைக்கு வந்­துள்ளார். இந்த விஜயம் தொடர்பில் எமக்கு சந்­தேகம் உள்­ளது. இவர்கள் புலம்­பெயர் புலி­க­ளுடன் ஏதேனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­னரா என்­பதில் சந்­தேகம் உள்­ளது.
 
மேலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் இன்று நல்­லாட்சி தொடர்பில் பேசு­கின்­றனர். அவ்­வாறு நல்­லாட்­சியை பேசும் இவர்­களின் கடந்த காலம் எவ்­வாறு இருந்­தது என்­பது எமக்கு மட்­டுமே தெரியும். வதை முகாம்­களில் இளை­ஞர்­க­ளுக்கு நடந்த கொடு­மைகள், இளம் பெண்­க­ளுக்கு நடந்த அநி­யா­யங்கள் மற்றும் கொலைகள் என்­பன இப்­போது இருக்கும் இளம் சமு­தா­யத்­துக்கு தெரி­யாமல் இருக்­கலாம். ஆனால் இந்த நாட்டில் வாழும் பெரி­ய­வர்கள், வய­தான அனை­வ­ருக்கும் உண்மை என்­ன­வென்­பது நன்­றா­கவே தெரியும்.
 
ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அனு­ர­கு­மார திஸா­நா­யக்க ஆகியோர் இந்த உண்­மை­களை மூடிமறைக்­கின்­றனர். இவர்கள் இந்த உண்­மை­களை மூடி­ம­றைக்­கலாம். ஆனால் நாம் தொடர்ந்தும் பழைய குப்­பை­களை கிள­றிக்­கொண்டே இருப் போம். இந்த குற்­றச்­செ­யல்­களின் உண் மையான குற்றவாளியை தண்டிக்க நாம் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருப்போம். அதேபோல் இப்போது முன்வைக்கப்பட்டிருக்கும் அனைத்து குற் றச்சாட்டுக்களையும் எமது அரசாங்கத்தில் காலதாமதமின்றி விசாரித்து முடிவு காணு வோம் என்றார்.

No comments:

Post a Comment