Thursday, August 13, 2015

இலங்­கையில் முஸ்லிம் தீவி­ர­வாத அமைப்­பான ஐ.எஸ்.ஐ.எஸ். இன் கொள்­கைகள் வேரூன்ற ஆரம்­பித்­து­விட்­டன: பொது­பல சேனா!

Thursday, August 13, 2015
இலங்­கையில் முஸ்லிம் தீவி­ர­வாத அமைப்­பான ஐ.எஸ்.ஐ.எஸ். இன் கொள்­கைகள் வேரூன்ற ஆரம்­பித்­து­விட்­ட­தையே அவ் அமைப்பு வெளி­யிட்­டுள்ள வரை­படம் நிரூ­பித்­துள்­ளது எனத் தெரி­விக்கும் பொது­பல சேனாவின் பணிப்­பாளர் நாயகம் கலா­நிதி டிலந்த விதா­னகே, இது தெரிந்தும் ஆட்­சி­யா­ளர்கள் தெரி­யா­த­வர்கள் போல் மௌனம் காப்­பது நாட்­டுக்கு ஆபத்தை விளை­விக்கும் என்றும் அவர் கூறினார்.
 
இது தொடர்­பாக டிலந்த விதா­னகே மேலும் தெரி­விக்­கை
யில்,
 
இலங்­கையில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் ஏற்­க­னவே தலை­தூக்­கி­யுள்ள நிலை யில் இன்று ஐ.எஸ்.ஐ.ஸ் அமைப்பும் தமது இஸ்­லா­மிய ராஜ்­ஜி­யங்­க­ளுக்­கான வரை­ப­டத்தில் இலங்­கை­யையும் இணைத்­துள் ­ளது.
இலங்­கைக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ் முஸ்லிம் தீவி­ர­வா­தி­களின் கொள்­கைகள் வேரூன்­றி­யுள்­ளதை இது வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே இது மிகப் பயங்­க­ர­மான நிலை­மை­ யாகும்.
ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு இது தெரியும். ஆனாலும் தெரிந்தும் தெரி­யா­தது போல மௌனம் காக்­கின்­றனர். இது நாட்­டுக்கு ஆபத்­தா­ன­தாக அமையும்.
 
இத் தீவி­ர­வாத அமைப்பின் கொள்­கைகள் நாட்­டுக்குள் வேரூன்ற ஆரம்­பித்து விட்­டது. இது தொடர்­பாக அரசாங்கம் தேடிப்பார்த்து நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் டிலந்த விதானகே தெரி­வித்துள்ளார்.

No comments:

Post a Comment