Thursday, July 16, 2015

பேரறிவாளன், சாந்தன், முருகன் மேல்முறையீடு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு செயல்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்!

Thursday, July 16, 2015
சென்னை:மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிததார். அப்போது அவர் கூறியதாவது:–
 
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளான சாந்தன், பேரறிவாளன், முருகன் மேல்முறையீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு எந்த உத்தரவை பிறப்பித்தாலும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். கோர்ட்டு உத்தரவை மத்திய அரசு மதித்து நடக்கும்.
 
ஆரம்ப காலத்தில் இந்த வழக்கு சரியாக பதிவு செய்யப்படவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதை உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்யும் என்று நம்புகிறேன்.
 
சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலையை அகலமாக்கி, தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற மத்திய அரசு தயாராக உள்ளது என்றாலும் இது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
 
எனவே தமிழக அரசு அனுமதி அளித்து ஒத்துழைத்தால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படும். இதன் மூலம் கிழக்கு கடற்கரை மாவட்டங்கள் பயன்பெறும், சுற்றுலா துறையும் வளர்ச்சி அடையும்.
நிலம் கையகப்படுத்தும் சட்டம் தனியாருக்கு ஆதரவாக இருக்காது. சாலை போக்குவரத்து கிராம வளர்ச்சிக்கு இந்த சட்டம் பயன்படும். ஏழைகளின் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தாது.
 
யாருடைய நிலம் கையகப்படுத்தப்படுகிறதோ அந்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும். நிலத்தின் மதிப்பை விட 4 மடங்கு நஷ்ட ஈடு தொகை வழங்கப்படும். மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தாலும், அதை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளிடமே இருக்கும்.
 
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

No comments:

Post a Comment