Thursday, July 16, 2015
லாரல்: சூரிய குடும்பத்தில் உள்ள 9வது கிரகமான புளூட்டோவை, நியூ ஹாரிசன் விண்கலம் நேற்று வெற்றிகரமாக கடந்து பூமிக்கு சிக்னல் கொடுத்தது. இதைப் பார்த்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானிகள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். சூரிய குடும்பத்தின் கடைசி எல்லையில் அமைந்துள்ள 9வது கிரகம் புளூட்டோ. இது சூரியனை ஒரு முறை சுற்றிவர 248 ஆண்டுகள் ஆகும். அவ்வளவு தூரமான வட்டபாதையில் இது சூரியனை சுற்றிக் கொண்டிருக்கிறது. இதை ஆராய நியூ ஹாரிசன் என்ற விண்கலம், நாசா மையம் கடந்த 2006ம் ஆண்டு அனுப்பியது. கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் 482 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து புளூட்டோ கிரகத்தை நெருங்கியது நியூ ஹாரிசன். ஐஸ்கட்டி கிரகமான புளூட்டோ மற்றும் அதன் துணைக் கோள்களை, நியூ ஹாரிசன் விண்கலம் நேற்று முன்தினம் வெற்றிகரமாக கடந்து சென்று பூமிக்கு சிக்னல் அனுப்பியது.
புளூட்டோ மற்றும் அதன் துணைக்கோள் சரான் இடையே பயணிக்கும்போது, நியூ ஹாரிசன் விண்லம் மீது, விண் துகள்கள் மோதி அதை செயல் இழக்கச் செய்யும் வாய்ப்புகள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதினர். ஆனால், அதுபோல் எதுவும் நடக்கவில்லை. புளூட்டோ மற்றும் அதன் துணைக்கோள்களை நியூ ஹாரிசன் வெற்றிகரமாக கடந்து பூமிக்கு சிக்னல் அனுப்பியது. இந்த சிக்னல் கிடைத்ததும் ஆய்வு பணியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் கைதட்டி ஆராவாரம் செய்து மகிழ்ந்தனர். புளூட்டோ மற்றும் அதன் துணைக் ேகாள்களை நியூ ஹாரிசன் விண்கலம் கடந்து வர 13 மணி நேரம் ஆனது. இந்தப் பயணத்தின் போது புளூட்டோ கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் பணி, புளூட்டோவின் இருளான பகுதியை அதன் நிலவான சரான் துணைக்கோள் வெளிச்சத்தில் போட்டோ எடுக்கும் பணி ஆகியவற்றை நியூ ஹாரிசன் மேற்கொண்டது.
இதன் ஆய்வு தகவல்கள், அளவீடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான போட்டோக்கள் ஆகியவற்றை நியூ ஹாரிசன் தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்ப 16 மாதங்கள் ஆகும். அதற்குள் இந்த விண்கலம் சூரிய குடும்பத்தின் கிரகங்களை தாண்டியுள்ள கியூபர் பகுதிக்கு சென்று மற்ற கிரகங்களை நெருங்கிவிடும்.

No comments:
Post a Comment