Wednesday, July 15, 2015

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ !

Wednesday, July 15, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலமையகத்தில் இடம்பெற்ற கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரைக்கு ஓகஸ்ட் 17ஆம் திகதி பதில் கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் கூட்டம் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. அக்கூட்டத்துக்கு சென்ற போது அங்கு குழுமியிந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ இம்முறை தேர்தலில் தோல்வியடைவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை அதுதொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, அதுதொடர்பில் ஓகஸ்ட் 17ஆம் திகதி பார்ப்போம் என மகிந்த பதில் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment