Thursday, July 16, 2015

கடந்த முறையை விட இம்முறை தேசியப் பட்டியலில் முக்கிய மாற்றங்கள்!!

Thursday, July 16, 2015
கடந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற 9 உறுப்பினர்களுக்கு இந்த முறை அந்த வாய்ப்பு கிடைக்காது போயுள்ளது.

இந்த பட்டியலில் முன்னாள் பிரதமர்களான டி எம் ஜயரத்ன மற்றும் ரட்ணசிறி விக்ரமநாயக்கவும் உள்ளடங்குகின்றனர்.
அதுபோல், கடந்த முறை தேசியப்பட்டியலில் தெரிவான 10 உறுப்பினர்கள் இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.


முன்னாள் பிரதமர் இருவரையும் தவிர, கடந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் உறுப்பினர்களான முன்னாள் பிரதியமைச்சர் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் மாலினி பொன்சேகா, கமலா ரணத்துங்க, ஏ எச் எம் அஸ்வர், எல்லாவல மேதானந்த தேரர், ஜனக பிரியந்த பண்டார மற்றும் ஜே.ஆர்.பி.சூரியபெரும ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த முறை கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதத்திர கூட்டணியில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட சரத் அமுனுகம மற்றும் களுத்துரை மாவட்டத்தில் போட்டியிட்ட ரேஜினோல்ட் குரே ஆகிய அமைச்சர்கள் இந்த முறை தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஜீவன் குமாரதுங்க மற்றும் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட பைசர் முஸ்தபா ஆகிய முன்னாள் அமைச்சர்கள் இந்த முறை கூட்டமைப்பின் தேசிய பட்டியல் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தேசிய பட்டியல் உறுப்பினர்களான திஸ்ச அத்தநாயக்க மற்றும் ஜனநாயக தேசிய கூட்டணியின் தேசிய பட்டியல் உறுப்பினரான டிரான் அலஸ் ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முறை ஐக்கிய முக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த முறை கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் தெரிவான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும் மாத்தறை மாவட்;டத்திலும், அச்சல சுரங்க ஜாகொட ரத்தினபுரி மாவட்டத்திலும் இந்த முறை போட்டியிடுகின்றனர்.

கடந்த முறை ஐக்கிய தேசிய கட்சியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட ஜே. ஸ்ரீரங்கா மற்றும் கொழும்பு மாவட்ட மாவட்டத்தில் போட்டியிட்ட பிரபா கணேஷன் ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட கரு ஜயசூரிய மற்றும் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட கே.வேலாயுதம் ஆகியோருக்கு இந்த முறை ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் இடம்கிடைக்கப்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம, இடதுசாரி கூட்டணியின்; தலைவர் ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

கடந்த முறை கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் இந்த முறை ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

அனுரகுமார திஸாநாயக்க கடந்த முறை தேசிய பட்டியலில் தெரிவான நிலையில் இந்த முறை அவர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.


இதேவேளை, கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்ட கீதாஞ்சன குணவர்தன, ஜோசப் மைக்கல் பெரேரா, மொஹமட் அஸ்வர் ஆகியோர் இந்த தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்.யோகராஜன், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் முத்து சிவலிங்கம் ஆகியோர் இந்த முறை தேசிய பட்டியலில் இருந்து விலகி நுவரெலிய மாவட்டத்தில் இந்த முறை போட்டியிடுகின்றனர்.

No comments:

Post a Comment