Thursday, July 16, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தோற்பார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் பகிரங்க அறிவிப்பு விடுத்த நிலையில், மஹிந்த வெற்றிபெறுவார் என உறுதியாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், வாக்கு மாறாதிருப்பதே தலைமைத்துவத்துக்கு அழகு என்றும் மைத்திரி மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தனர். மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கும் விடயம் முதல், பிரதமர் வேட்பாளர்வரை நாம் கூறியது எல்லாம் நடந்தது. இனியும் நடக்கும். ஆனால், ஜனாதிபதி கூறியது எதுவுமே நடக்கவில்லை என்றும், ஜனாதிபதி சயாதீனமாக செயற்பட்டால் போதும் என்றும் சு.கவினர் தெரிவித்தனர்.
கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்லிஷ மீண்டும் தோல்விடையவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில் உங்கள் கருத்து என்ன என ஊடகவியளார்கள் எழுப்பிய கேள்விகளுக்கப் பதிலளித்த ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளர் சுஸில் பிரேமஜயந்த, "அது பற்றி எம்மிடம் கேட்கக் கூடாது. அவரிடம்தான் கேட்க வேண்டும். நான் அன்றும், இன்றும் ஒரே கருத்தைக்தான் கூறுகின்றேன். அதுதான் அரசியல் தலைமைத்துவத்துக்கு அழகு. ஜனாதிபதியின் அறிவிப்பை ஆசிர்வாதமாகவே நாம் கருதுகின்றோம். மகிழ்ச்சிடைகின்றோம். தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஊக்கம் எமக்குக் கிடைத்துள்ளது. மஹிந்த தோற்க மாட்டார். நாம் வெற்றிபெறுவோம். வெற்றிபெறுவதற்காகத்தான் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
ஜனாதிபதி சுயாதீனமாக செயற்பட்டால் போதும்" - என்றார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பானவாறுதானே ஜனாதிபதியின் அறிவிப்பு அமைந்துள்ளது என்ற கேள்விக்குப் பதிலளித்த டலஸ் அழகப்பெரும, "ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரைப் பாதுகாப்பதற்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதி கூறியிருப்பது உலக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக இடம்பெற்றுள்ளது. உலகில் எந்த நாட்டிலும் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை. இது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. தேர்தலில் சுயாதீனமாக செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குத் தலைமைத்துவம் தேவை. அதனால்தான் இந்த முடிவை (தேர்தல் நடவடிக்கை குழுவின் தலைவராக மஹிந்தவை) எடுத்துள்ளோம். கட்சித் தலைமைத்துவம் வேறு, தேர்தல் நடவடிக்கை குழுவின் தலைமைத்துவம் வேறு" - என்றார்...
கட்சி தாவியோரின் உறுப்புரிமை நீக்கம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது'' - என்று கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இதற்கமைய அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்தன மற்றும் ஹிருணிகா பிரேமசந்திர ஆகியோரின் உறுப்புரிமைகள் நீக்கப்படவுள்ளதாகவும், கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கட்சியிலிருந்து வெளியேறி, வேறொரு கட்சியில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்தே அவர்களின் உறுப்புரிமை இரத்தாகிவிடும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்லிஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்ததையடுத்து, அதிருப்தியடைந்த மேற்படி தரப்பினர், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட கடந்த 12ஆம் திகதி வேட்புமனுவில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment