Thursday, July 16, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராவதனை யாராலும் தடுக்க முடியாது: ஜோன் செனவிரட்ன!

Thursday, July 16, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராவதனை யாராலும் தடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பிரதமர் வேட்பாளர் ஒருவரை நியமிப்பதில்லை எனவும், பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் பிரதமர் தெரிவு செய்யப்படுவார் எனவும் ஜனாதிபதி அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

எனினும், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவுடையவர் பிரதமராக தெரிவு செய்யப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மை ஆதரவினை பெற்றுக் கொண்டவருக்க பிரதமர் பதவி வழங்கப்படாது எனக் கூற எவராலும் முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment