Thursday, July 16, 2015
ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு
துரோகம் இழைத்து விட்டதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம்
சுமத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான வகையில் ஜனாதிபதி
செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகளுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்து அவர்களை காப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைப்பத்திர மோசடி தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலேயே ஜனாதிபதியின் உரை அமைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேர்தலில் சாதகத்தன்மையை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment