Thursday, July 16, 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையின் எதிரொலி: மூவர் பதவி விலகல்!

Thursday, July 16, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கியமை தொடர்பில் நேற்று முன்தினம் கருத்து வெளியிட்டிருந்தார்.இதனால் அதிருப்தி அடைந்த ஐந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் தங்களது பதவிகளை துறப்பது குறித்து இன்று தீர்மானம் மிக்கதோர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
 
சுதர்சினி பெர்ணன்டோ பிள்ளை, ஹெரிக் வீரவர்தன லசந்த அழகிய வண்ண ஆகியோர் தமது பிரதியமைச்சு பதவிகளிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம்  நாட்டு மக்கள் நிகழ்த்தியிருந்த விசேட உரைக்கு அதிருப்தி தெரிவித்தே இவர்கள் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment